காஞ்சிபுரம் மாவட்டம் அயப்பன்தாங்கல் ஊராட்சியில் திமுக இளைஞர் அணி சார்பில் உறுப்பினர் சேர்க்கை கூட்டம் நடைபெற்றது. திமுக மாவட்டச் செயலாளரும் எம்எல்ஏவுமான தா.மோ. அன்பசரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் திமுக முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு எம்.பி. கலந்து கொண்டார்.
‘பேனர் வைப்பதை வரைமுறைப்படுத்த சட்டம் வேண்டும்’ - டி.ஆர். பாலு கோரிக்கை - tr baalu
காஞ்சிபுரம்: பேனர் வைப்பதை வரைமுறைப்படுத்த தனி சட்டம் இயற்ற வேண்டும் என திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர். பாலு எம்.பி, கோரிக்கை வைத்துள்ளார்.
tr baalu
அப்போது பேசிய அவர், ”பேனர் வைப்பதை வரைமுறைப்படுத்த சட்டப்பேரவையில் சட்டம் கொண்டு வர வேண்டும் என்றும், வருகின்ற சட்டப்பேரவைக் கூட்டத்தில் சட்டம் இயற்றவில்லை என்றால் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஸ்டாலின் சட்டம் கொண்டு வருவார் எனவும் தெரிவித்தார்.
மேலும், இக்கூட்டத்தில் திமுக ஒன்றியச் செயலாளர் படப்பை. மனோகரன், திமுக நிர்வாகிகள் ராஜா தேசிங்கு, ஜெனா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.