17ஆவது மக்களவைக்கான தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 38 தொகுதிகளில் வென்றுள்ளது. இதில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட 23 பேரும் வெற்றிவாகை சூடியுள்ளனர்.
இந்நிலையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திமுக எம்.பி.க்களின் கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது.
இதில், திமுக மக்களவைக் குழு தலைவராக ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த பொறுப்பிற்கு கனிமொழிக்கும், டி.ஆர். பாலுவுக்கும் இடையே கடும் போட்டி நிலவியதாக தகவல்கள் வெளியான நிலையில், டி.ஆர். பாலு ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.