சென்னை, நுங்கம்பாக்கம் கோத்தகிரி சாலை பகுதியில் வசித்து வருபவர் ரீட்டா (49). இவர் லேன்சன் டொயோட்டா நிறுவனத்தின் கார் டீலராக இருந்தார்.
டொயோட்டா கார் நிறுவன டீலர் தூக்குப்போட்டுத் தற்கொலை - chennai nungampakkam
சென்னை : நுங்கம்பாக்கம் அருகே லேன்சன் டொயோட்டா நிறுவனத்தின் டீலர் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இவரது வீட்டில் மேற்பார்வையாளராகப் பணிபுரியும் ஏசுபாதம் என்பவர், இன்று காலை 9 மணியளவில் இவரது வீட்டில் சென்று பார்க்கும் பொழுது ரீட்டா தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனே அவர் இது குறித்து நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். இதனைத்தொடர்ந்து அங்கு வந்த காவல் துறையினர் ரீட்டாவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து காவல் துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.