தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாலை 7 மணி செய்திச் சுருக்கம் - Top 10 news @ 7 PM - மாலை 7 மணி செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் மாலை 7 மணி செய்திச் சுருக்கம்.

top10 news at 7 pm
மாலை 7 மணி செய்திச் சுருக்கம் - Top 10 news @ 7 PM

By

Published : Apr 7, 2021, 7:45 PM IST

'நான் தனிமனிதத் தாக்குதலை நடத்தவில்லை' - உதயநிதி

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி தனிமனிதத் தாக்குதலை நடத்தவில்லை என திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி, தன் மீதான குற்றச்சாட்டிற்குப் பதிலளித்துள்ளார்.

இரு சக்கர வாகனத்தில் வாக்குப்பதிவு இயந்திரம்- சிபிஐ விசாரிக்க காங்கிரஸ் வலியுறுத்தல்

வேளச்சேரியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற விவகாரத்தில் ஐஜி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்தில் வலியுறுத்தப்பட்டது.

திருநெல்வேலியில் வாக்குப்பதிவு குறைவு ஏன்? மாவட்ட ஆட்சியர் விளக்கம்

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஐந்து சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள், ஸ்ட்ராங் அறையில் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டன. வாக்கு எண்ணும் மையத்தில் மூன்றடுக்கு காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அமைச்சர் பெஞ்சமின் அவதூறு பேச்சு - தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்!

திமுக இளைஞரணி நிர்வாகிகளை கொச்சையான வார்த்தைகளால் திட்டிய அமைச்சர் பெஞ்சமின் மீது திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகாரளிக்கப்பட்டதாக திமுக தலைமை வழக்கறிஞர் நீலகண்டன் தெரிவித்துள்ளார்.

திமுக, அதிமுகவை சேர்ந்தவர்கள் மீது வழக்குப்பதிவு

தொண்டாமுத்தூர் தொகுதியில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட திமுக, அதிமுகவை சேர்ந்த 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இத்தாலி மாலுமிகள் மீதான வழக்கை தள்ளுபடி செய்ய மத்திய அரசு முறையீடு!

2012இல் கேரளத்தில் இரு தமிழ்நாட்டு மீனவர்களை சுட்டுக்கொன்ற இத்தாலிய மாலுமிகள் மீதான வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது.

கோவிட்-19 தீவிரம்: மத்திய அரசுக்கு மகாரஷ்டிரா சுகாதார அமைச்சர் அவசரக் கடிதம்

மகாராஷ்டிராவில் கோவிட்-19 வேகமாகப் பரவிவருவதால் அம்மாநில சுகாதார அமைச்சர் மத்திய அரசுக்கு அவசரக் கடிதம் எழுதியுள்ளார்.

ரெய்டுக்கு பயந்து பணத்தை எரித்த இடைத்தரகர்!

லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைக்கு பயந்து, தெலங்கானாவைச் சேர்ந்த இடைத்தரகர் பணத்தை அடுப்பில் வைத்து எரித்துள்ளார். மொத்தம் 70 விழுக்காடு பணம் எரிந்த நிலையில், அலுவலர்கள் அதனை மீட்டு, மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

IPL 2021 : மீண்டெழுமா தோனியின் அதிரடிப்படை?

சென்னை அணியின் முப்பெரும் தூண்களாக கருதப்படும் தோனி, ரெய்னா, ஜடேஜா ஆகியோர் நீண்ட இடைவேளைக்குப் பின் விளையாடுவது சிஎஸ்கேவிற்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தலாம்.

கதாநாயகனாக மாறிய காமெடியன் சதீஷ்!

நகைச்சுவை நடிகர் சதீஷ் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக பவித்ரா லட்சுமி நடிக்கிறார்.

ABOUT THE AUTHOR

...view details