தமிழ்நாடு

tamil nadu

காலை 9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9 AM

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திச் சுருக்கம்...

By

Published : Jul 11, 2021, 9:29 AM IST

Published : Jul 11, 2021, 9:29 AM IST

top 10 news at 9 am  top ten news at 9 am  top ten  top news  latest news  news updates  tamilnadu news  tamilnadu latest news  ஈடிவி பாரத்  செய்திச் சுருக்கம்  முக்கிய செய்திகள்  தமிழ்நாடு செய்திகள்  காலை 9 மணி செய்திச் சுருக்கம்  9 மணி செய்திச் சுருக்கம்  ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திச் சுருக்கம்
செய்திச் சுருக்கம்

1. அரசுக்கு சொந்தமான நவீன அரிசி ஆலையை திறக்க கோரிக்கை

திருவாரூரில் கடந்த ஐந்து ஆண்டுகளாக மூடப்பட்டுள்ள தமிழ்நாடு நவீன அரிசி ஆலையை செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

2. எலுமிச்சை விளைச்சல் இருந்தும் உரிய விலை கிடைக்கவில்லை - விவசாயிகள் கவலை

அதிக விளைச்சல் இருந்தும், உரிய விலை கிடைக்கவில்லை என எலுமிச்சை விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

3. தண்ணீரின்றி வாடும் பயிர்கள்: விவசாயிகள் வேதனை

நன்னிலத்தில் தண்ணீரின்றி குறுவை பயிர்கள் காய்ந்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

4. அம்மா குடிநீர் : மீண்டும் விற்பனை செய்ய கோரிக்கை

அம்மா குடிநீர் திட்டத்தை, தமிழ்நாடு அரசு மீண்டும் செயல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

5. வாடகை விலக்கு அளிக்க கோரிக்கை

ஊரடங்கு காரணமாக வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் கடைகளுக்கு 6 மாதங்கள் வாடகை விலக்கு அளிக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா வலியுறுத்தியுள்ளார்.

6. நீட் தேர்வு வேண்டாம் என்பதே தமிழ்நாட்டின் நிலைப்பாடு - முன்னாள் எம்பி மைத்ரேயன்

நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்பதே தமிழ்நாட்டின் அனைத்து கட்சிகளின் நிலைப்பாடு என அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரேயன் தெரிவித்துள்ளார்.

7. மாநிலம் பிரிப்பதை யார் முடிவு செய்ய வேண்டும் - எம்பி ஜோதிமணி

ஒரு மாநிலம் பிரிக்கப்பட வேண்டுமா என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள், பாஜக முடிவுசெய்ய முடியாது என கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி குற்றம்சாட்டியுள்ளார்.

8. ‘வெள்ளை யானை’ திரைப்படம்: தனியார் தொலைக்காட்சியில் இன்று ரிலீஸ்

சமுத்திரக்கனி, யோகிபாபு நடிப்பில் உருவான ‘வெள்ளை யானை’ திரைப்படம் தனியார் தொலைக்காட்சியில் இன்று (ஜூலை 11) வெளியாகிறது.

9. கோவாவில் குறையாத கரோனா... சுற்றுலா தலம் திறப்புக்குக் காத்திருக்கும் மக்கள்!

கோவாவில் கடந்த 24 மணி நேரத்தில் 155 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்

10. 'நாகநாதன் தங்கம் வெல்லவேண்டும் என்பதே ஆசை'- பயிற்சியாளர் பிரபாகரன்

ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வாகியுள்ள ஆயுதப்படை காவலர் நாகநாதன் தங்கப்பதக்கம் வெல்ல வேண்டும் என்பதே எனது ஆசை என அவரின் பயிற்சியாளரும், ஆயுதப்படை காவலருமான பிரபாகரன் கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details