தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

7 மணி செய்திச்சுருக்கம் Top 10 news @ 7 PM

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச்சுருக்கம்...

top ten news at 7 pm  top ten  top ten news  top news  tamilnadu news  tamilnadu latest news  latest news  தமிழ்நாடு செய்திகள்  முக்கியச் செய்திகள்  இன்றைய முக்கியச் செய்திகள்  செய்திச்சுருக்கம்  7 மணி செய்திச்சுருக்கம்
செய்திச்சுருக்கம்

By

Published : Aug 2, 2021, 7:24 PM IST

1. தமிழ்நாடு சட்டப்பேரவையில் கருணாநிதியின் உருவப்படத்தை திறந்துவைத்த குடியரசுத்தலைவர்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கருணாநிதியின் உருவப்படத்தை, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று (ஆகஸ்ட் 02) திறந்து வைத்தார்.

2. பாண்டியன் சிறப்பு ரயிலில் கூடுதல் குளிர்சாதனப் பெட்டி

மதுரை - சென்னை பாண்டியன் சிறப்பு ரயிலில் கூடுதலாக ஒரு குளிர்சாதன மூன்று அடுக்கு படுக்கை வசதி பெட்டி இணைக்கப்பட உள்ளதாக மதுரை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

3. புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு இல்லை - அமைச்சர் நமச்சிவாயம்

புதுச்சேரியில் தற்போது பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாது, 75 விழுக்காட்டுக்கு மேல் கல்விக்கட்டணம் வசூலிக்கும், கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

4. பெகாசஸ் ஊழல் குறித்து விசாரணை தேவை - நிதிஷ் குமார்

பெகாசஸ் ஊழல் குறித்து முறையான விசாரணை நடத்த வேண்டும் என பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் வலியுறுத்தியுள்ளார்

5. தங்கம் விலை சரிவு

மாலை நிலவரப்படி சென்னையில் இன்று (ஆக. 02) ஆபரணத் தங்கத்தின் விலை (22 காரட்) சவரனுக்கு ரூ. 36,184-க்கு விற்பனையாகிறது.

6. அனைவருக்கும் கல்வி: விழிப்புணர்வை ஏற்படுத்தும் தியா மிர்சா

நடிகை தியா மிர்சா தனது பள்ளி கால புகைப்படத்தை பகிர்ந்து கல்வி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.

7. சீனு ராமசாமியின் புதிய படம் தொடக்கம்!

இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் ஜிவி. பிரகாஷ் குமார் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.

8. ஷாருக்கானை கலாய்த்த இந்திய மகளிர் ஹாக்கி அணியின் கோச்!

இந்திய மகளிர் ஹாக்கி அணி கோச், ஷாருக்கானின் ட்வீட்டுக்கு பதிலளித்து கலாய்த்துள்ளார்.

9. குதிரையேற்றம்: ஃபவுத் மிர்சா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

ஒலிம்பிக் குதிரையேற்றத்தில் இந்திய வீரர் ஃபவுத் மிர்சா இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார்.

10. சாய்னா நேவால் பாராட்டவில்லை - பி.வி. சிந்து

தேசிய பேட்மிண்டன் பயிற்சியாளர் கோபிசந்த் வாழ்த்துகள் தெரிவித்தார் ஆனால் சாய்னா நேவால் பாராட்டவில்லை என பி.வி. சிந்து தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details