தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காலை 7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7AM - 7 மணி செய்திகள்

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

top ten news at 7 am  top ten  top ten news  top news  latest news  tamil nadu latest news  tamil nadu news  news update  today news  தமிழ்நாடு செய்திகள்  இன்றைய செய்திகள்  இன்றைய முக்கியச் செய்திகள்  முக்கியச் செய்திகள்  காலை செய்திகள்  7 மணி செய்திகள்  செய்திச் சுருக்கம்
செய்திச் சுருக்கம்

By

Published : Oct 25, 2021, 6:56 AM IST

1. சமூக நீதி கண்காணிப்புக் குழுவில் மேலும் ஒருவர்; முதலமைச்சர் உத்தரவு!

மருத்துவர் சாந்தி ரவீந்திரநாத்தை சமூக நீதி கண்காணிப்புக் குழுவில் உறுப்பினராக நியமித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று உத்தரவிட்டார்.

2. பொறியியல் கல்வியில் ஆதிதிராவிடர்களுக்கான கலந்தாய்வு

அருந்ததியினருக்கான உள் ஒதுக்கீட்டில் நிரப்பப்படாமல் உள்ள இடங்களில், ஆதிதிராவிடர் மாணவர்களை சேர்ப்பதற்காக இணையதளம் மூலம் கலந்தாய்வு நடைபெறுகிறது.

3. கரும்புக்கு ரூ.200 கோடி நிலுவைத் தொகை வழங்கல் - அமைச்சர் ஆர். சக்கரபாணி

விவசாயிகளின் நன்மை கருதி கரும்புக்கு ரூ.200 கோடி நிலுவைத்தொகை வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் ஆர். சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

4. மனோன்மணியம் பல்கலைக்கழகமே முதுகெலும்புடன் செயல்படு! - சு.ப. உதயகுமார்

இந்து முன்னணியின் எதிர்ப்பை அடுத்து, பெரியார் தொடர்பான நிகழ்ச்சியை நடத்த நெல்லை மனோன்மணியம் பல்கலைக்கழகம் தயக்கம் காட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், கல்வியாளர்கள் இந்த நிகழ்ச்சியை நடத்தும்படி வலியுறுத்தியுள்ளனர்.

5. அமைச்சருக்கு கமிஷன் வரவே தமிழ்நாடு மின்சார வாரியம்- அண்ணாமலை

மின்சாரத்துறை அமைச்சருக்கு கமிஷன் வருவதற்காகவே தமிழ்நாடு மின்சாரத்துறை வாரியம் செயல்படுகிறது என தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

6. கோயில் தங்கத்தை உருக்கி பிஸ்கட் ஆக மாற்ற அரசு குறி- ஹெச்.ராஜா

கோயில்களில் இருக்கும் தங்கத்தை உருக்கி பிஸ்கட்டுகள் ஆக்கவே அரசு குறியாக செயல்படுகிறது என பாஜக மூத்தத் தலைவர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.

7. தந்தங்களுக்காக கொல்லப்பட்ட யானை?

கோயம்புத்தூர் போளுவம்பட்டி வனச்சரகத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் ஆண் யானை உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

8. மன் கி பாத்: 100 கோடி தடுப்பூசி செலுத்தியது இந்தியாவுக்கு மகுடம் போன்றது - பிரதமர் பெருமிதம்

100 கோடி தடுப்பூசிகள் என்ற இலக்கை எட்டியது இந்தியாவிற்கு மகுடம் போன்றது என பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

9. ஜாங்கோ ரிலீஸ் தேதி வெளியீடு

அறிமுக நடிகர் சிதீஷ் நாயகனாக நடித்துள்ள ஜாங்கோ படத்தின் ரிஸீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

10. டி20 உலக கோப்பை - இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் வரலாற்று வெற்றி

டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details