தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காலை 7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7AM

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

top ten news at 7 am  top news  top ten  top ten news  latest news  tamilnadu latest news  tamilnadu news  news update  today news  தமிழ்நாடு செய்திகள்  இன்றைய செய்திகள்  இன்றைய முக்கியச் செய்திகள்  முக்கியச் செய்திகள்  அண்மை செய்திகள்  காலை செய்திகள்  காலை 7 மணி செய்திகள்  செய்திச் சுருக்கம்
செய்திச் சுருக்கம்

By

Published : Oct 24, 2021, 7:15 AM IST

1. திரையரங்கில் 100 விழுக்காடு பார்வையாளர்களுக்கு அனுமதி - தமிழ்நாடு அரசு

நவம்பர் 1ஆம் தேதி முதல் திரையரங்கில் 100 விழுக்காடு பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நவம்பர் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

2. தீபாவளிக்கு குறைவில்லாமல் பேருந்துகள் - ராஜகண்ணப்பன்

தீபாவளி சிறப்பு பேருந்து தேவைக்கு ஏற்ப இயக்கப்படும் எனவும், புதிதாக 500 மின்சார பேருந்துகள் வாங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

3. பிச்சிவிளை ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் திடீர் ராஜினாமா

திருச்செந்தூர் அருகே பிச்சிவிளை ஊராட்சியில் தேர்வு செய்யப்பட்ட வார்டு உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக ராஜினாமா கடிதம் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

4. பாஜக கல்யாணராமன் பிணை மனு - காவல்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

ட்விட்டரில் தொடர்ச்சியாக சர்ச்சை கருத்துகளை வெளியிட்டதாக கைது செய்யப்பட்ட பாஜக செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் தாக்கல் செய்த பிணை மனுவுக்கு பதிலளிக்கும்படி காவல்துறைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

5. அதிமுகவை உரிமை கோர சசிகலாவுக்கு எந்த அடிப்படை உரிமையும் இல்லை - நீதிமன்றத்தில் வாதம்

அதிமுக பொதுச்செயலாளராக உரிமை கோர சசிகலாவுக்கு எந்த அடிப்படை உரிமையும் இல்லை என அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

6. இளங்கோவன் தொடர்புடைய இடங்களில் கைப்பற்றப்பட்டது என்ன?

தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி் தலைவர் மற்றும் சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர் இளங்கோவன் தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற சோதனையில் 45 கோடி ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு நிறுவன பங்கு முதலீடுகள், 20 கிலோ தங்க நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறை தெரிவித்துள்ளது.

7. அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு - காவல் துறை விசாரணை

வள்ளிமலை மலை மீது அழுகிய நிலையில் மீட்கப்பட்ட ஆண் சடலம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

8. இந்தியாவின் முதல் ஐவிஎஃப் 'Banni' எருமை பிறந்துள்ளது

குஜராத் மாநிலம் சோம்நாத்தில் நாட்டின் முதல் ஐவிஎஃப் எருமை பிறந்துள்ளது.

9. தேர்தலுக்குப் பின் ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து - அமித் ஷா தகவல்

ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடத்தி முடித்தபின் மாநில அந்தஸ்து திரும்பி வழங்கப்படும் என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.

10. வலியை தாங்கிக்கனும்...போட்டின்னு வந்த நீங்க எதிரி: வெளியான 'எனிமி' ட்ரெய்லர்

ஆர்யா, விஷால் இணைந்து நடித்துள்ள 'எனிமி' படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details