தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காலை 7 மணி செய்திகள் TOP 10 NEWS @ 7 AM - காலை 7 மணி செய்திகள்

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

top ten news at 7 am  top ten  top news  top ten news  latest news  tamilnadu latest news  tamill nadu news  news update  today news  தமிழ்நாடு செய்திகள்  முக்கியச் செய்திகள்  இன்றைய முக்கியச் செய்திகள்  இன்றைய செய்திகள்  காலை செய்திகள்  செய்திச் சுருக்கம்  அண்மைச் செய்திகள்  காலை 7 மணி செய்திகள்  7 மணி செய்திகள்
காலை 7 மணி செய்திகள்

By

Published : Oct 17, 2021, 7:06 AM IST

1. பண்டிகைக் காலங்களில் மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் - ராதாகிருஷ்ணன்

பண்டிகைக் காலங்களிலும், போக்குவரத்திலும், மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

2. தோல்விக்கானக் காரணங்களைத் தேடுகின்ற அதிமுகவினர் - அமைச்சரின் குற்றச்சாட்டு

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தோல்விக்கான காரணங்களை அதிமுக தேடி வருவதாக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு குற்றஞ்சாட்டியுள்ளார்.

3. கயத்தாற்றில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் - வைகோ

கயத்தாற்றில் ஊமைத்துரையும், கட்டபொம்மனும் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த இடத்தில் மணிமண்டபம் கட்ட வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேட்டுக்கொண்டுள்ளார்.

4. பள்ளிகள் திறப்பு: ஆசிரியர் சங்கங்களுடன் அமைச்சர் ஆலோசனை!

தமிழ்நாட்டில் வருகின்ற நவம்பர் 1ஆம் தேதி ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், வருகின்ற அக்டோபர் 21ஆம் தேதி ஆசிரியர் சங்கங்களுடன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனையில் ஈடுபடவுள்ளதாக பள்ளிக்கல்வித்துறையின் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5. வெளியாள் நுழைய 'உள் அனுமதிச்சீட்டு' முறை வேண்டும் - தமிழ் தேசியபேரியக்கம் வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் நுழைகின்ற அயல் மாநிலத்தவரை கட்டுப்படுத்தும் வகையில், வடகிழக்கு மாநிலங்களில் உள்ள நடைமுறையைப் போல் 'உள் அனுமதிச்சீட்டு' முறை (innerline permit) அமல்படுத்தப்பட வேண்டும் என்றும், இந்த சிறப்பு அனுமதியை தமிழ்நாடு அரசு, ஒன்றிய அரசிடம் கேட்டுப் பெற வேண்டும் என தமிழ்த் தேசிய பேரியக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

6. சிக்கன் கிரேவி சாப்பிட்ட தாய், மகள் உயிரிழப்பு - திடுக்கிடும் தகவல்

கோவில்பட்டியில் சிக்கன் கிரேவி சாப்பிட்டு விட்டு, குளிர்பானம் குடித்ததால் தாய், மகள் உயிரிழந்த விவகாரத்தில், அவர்கள் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டது வந்துள்ளது. தற்கொலைக்கு தூண்டியதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

7. புதிய பாதுகாப்பு தொழிற்சாலைகளை தொடங்கி வைத்த பிரதமர்

ஆவடியில் உள்ள திண் ஊர்தி தொழிற்சாலையில் பாரத பிரதமர் காணொலி காட்சி வழியாக 7 புதிய பாதுகாப்பு தொழிற்சாலைகளை தொடங்கிவைத்தார்.

8. மன்மோகன் சிங்குக்கு டெங்கு பாதிப்பு!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

9. பாத்து துண்டு விழப்போது...ரன்வீரை கலாய்த்த பூஜா ஹெக்டே

நடிகர் ரன்வீர் சிங் தனது சமூகவலைதளப்பக்கத்தில் பதிவிட்ட புகைப்படத்திற்கு, நடிகை பூஜா ஹெக்டே பதிவிட்ட பதிவு அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

10. Biggboss 5: முதல் நபராக வெளியேறும் போட்டியாளர் யார்?

பிக்பாஸ் 5 ஆவது சீசனிலிருந்து வெளியேறும் முதல் நபர் யார் என தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details