தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாலை 5 மணி செய்திச்சுருக்கம் Top 10 News @ 5 PM - மாலை 5 மணி செய்திச்சுருக்கம்

ஈடிவி பாரத்தின் மாலை 5 மணி செய்திச்சுருக்கம்.

top ten news  top ten  top news  latest news  tamilnadu latest news  tamilnadu news  news update  தமிழ்நாடு செய்திகள்  முக்கியச் செய்திகள்  இன்றைய முக்கியச் செய்திகள்  செய்திச்சுருக்கம்.  மாலை 5 மணி செய்திச்சுருக்கம்  5 மணி செய்திச்சுருக்கம்
செய்திச்சுருக்கம்

By

Published : Aug 23, 2021, 4:55 PM IST

1. அனைத்து தொகுதிகளிலும் தடுப்பணைகள் கட்டப்படும் - அமைச்சர் துரைமுருகன்

அனைத்து சட்டபேரவைத் தொகுதிகளிலும் தடுப்பணைகள் கட்டப்பட இருப்பதால், சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகளில் எந்தப் பகுதிகளில் தடுப்பணைகள் வேண்டும் என கோரிக்கை மனு அளிக்கலாம் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

2. மதுரை ஆதீனத்தின் குருமகா சந்நிதானம் பொறுப்பேற்பு: மடாதிபதிகள் பங்கேற்பு

மதுரை ஆதீனத்தின் 293ஆவது குருமகா சந்நிதானமாக ஸ்ரீலஸ்ரீ ஹரிஹரர் ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். இந்த நிகழ்வில் பல்வேறு ஆதீனங்களைச் சேர்ந்த மடாதிபதிகள் பங்கேற்றனர்.

3. கோடநாடு விவகாரத்தில் அதிமுக தலைவர்கள் அஞ்சுவது ஏன்? - காங். எம்எல்ஏ கேள்வி

கோடநாடு விவகாரத்தில் அதிமுக தலைவர்கள் அஞ்சுவது ஏன் என காங்கிரஸ் கட்சி சட்டப்பேரவைத் தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார்.

4. அவதூறு வழக்கை அவசர வழக்காக விசாரிக்க முடியாது - நீதிமன்றம்

அவதூறு வழக்தை ரத்து செய்ய வேண்டும், நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் முன் வைக்கப்பட்ட முறையீட்டை ஏற்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

5. சுகேஷ் சந்திரசேகர் வீட்டில் சோதனை- 16 சொகுசு கார்கள் பறிமுதல்

சுகேஷ் சந்திரசேகர் வீட்டில் டெல்லி அமலாக்கத் துறையினர் நடத்திய சோதனையில் 70 கோடி மதிப்பிலான 16 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

6. கோயில் நிலத்தை வேறு பயன்பாட்டுக்கு மாற்ற தடை!

அறநிலையத்துறை சட்டப்படி கோயில் பயன்பாட்டை தவிர்த்து, பிற பயன்பாட்டுகளுக்காக கோயில் நிலங்களை பயன்படுத்தக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

7. நகைக் கடையில் தீ விபத்து

சென்னை பூக்கடை என்.எஸ்.சி போஸ் சாலையில் உள்ள பாத்திமா ஜூவல்லரி என்ற நகைக் கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

8. காசேதான் கடவுளடா படப்பிடிப்பு நிறைவு!

மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகிவந்த ’காசேதான் கடவுளடா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

9. அடித்தது லக்... மக்கள் செல்வனுக்கு ஜோடியான பிக்பாஸ் பிரபலம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஷிவானி முதல்முறையாக விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

10. ரிலீஸுக்கு முன்பே ட்விட்டரில் பட்டைய கிளப்பிய வலிமை

வலிமை படத்தின் ஹேஷ் டாக் ட்விட்டரில் இந்திய அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details