தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

11 மணி செய்திச்சுருக்கம் Top 10 news @ 11 AM - ஈடிவி பாரத்தின் 11 மணி செய்திச்சுருக்கம்

ஈடிவி பாரத்தின் 11 மணி செய்திச்சுருக்கம்...

top ten news at 11 am  top ten  top 10  top ten news  latest news  tamilnadu news  tamilnadu latest news  தமிழ்நாடு செய்திகள்  முக்கியச் செய்திகள்  செய்திச்சுருக்கம்  11 மணி செய்திச்சுருக்கம்  ஈடிவி பாரத்தின் 11 மணி செய்திச்சுருக்கம்  ஈடிவி பாரத்
செய்திச்சுருக்கம்

By

Published : Jul 12, 2021, 11:56 AM IST

கொங்கு நாடு விவகாரம் - பாஜக மறுப்பு

கொங்கு நாடு என்பது பாஜக கருத்து அல்ல என்றும், வளமான தமிழ்நாடு, வலிமையான பாரதம் என்பதே லட்சியம் என பாஜக தெரிவித்துள்ளது.

அரசியலுக்கு கதம் கதம் - ரஜினிகாந்த்

எதிர்காலத்திலும் அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

பழனியில் தரிசனம் செய்த பாஜக தலைவர் அண்ணாமலை

தமிழ்நாடு பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அண்ணாமலை, பழனி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

பவானிசாகர் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கரோனா பரவல் குறைந்ததையடுத்து, பவானிசாகர் அணை பூங்காவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

சிறுவாக்கம் குளத்தை மீட்க பொதுமக்கள் கோரிக்கை!

சிறுவாக்கம் கிராமத்தில் உள்ள வள்ளியம்மன் கோயில் குளம் மாசடைவதைத் தடுக்க வேண்டும் எனவும், கரையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

சங்கரய்யா 100ஆவது பிறந்தநாள் - அரசு விழாவாக கொண்டாட கோரிக்கை

மூத்த தலைவர் சங்கரய்யா நூற்றாண்டை அரசு விழாவாக கொண்டாட முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோரிக்கை விடுத்துள்ளது

குப்பைகளை கொட்ட கிராம மக்கள் எதிர்ப்பு

கொல்லாபுரம் கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

சிரியன் தேவாலயத் தலைவர் மரணம்!

இந்திய சிரிய தேவாலயத்தின் தலைவரான பசெலியோஸ் மார்தோமா பாலோஸ் II இன்று அதிகாலை கேரளாவில் காலமானார்.

சுமார் 37 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி

கரோனா பாதிப்பில் இருந்து நேற்று (ஜூலை 11) ஒரே நாளில் 39 ஆயிரத்து 649 பேர் குணமடைந்ததாக ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடலில் மூழ்கி 7 வயது சிறுமி உயிரிழப்பு

மண்டபம் அருகே கடற்கரையில் குளித்துக்கொண்டிருந்த 7 வயது சிறுமி கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details