தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நண்பகல் 1 மணி செய்திச்சுருக்கம் Top 10 news @1PM

ஈடிவி பாரத்தின் நண்பகல் ஒரு மணி செய்திச்சுருக்கம்..

top ten news  top ten  top news  top ten news at 1 pm  tamilnadu news  latest news  tamilnadu latest news  news update  தமிழ்நாடு செய்திகள்  முக்கியச் செய்திகள்  இன்றைய முக்கியச் செய்திகள்  செய்திச்சுருக்கம்  1 மணி செய்திச்சுருக்கம்  நண்பகல் 1 மணி செய்திச்சுருக்கம்  நண்பகல் செய்திகள்
செய்திச்சுருக்கம்

By

Published : Sep 4, 2021, 1:13 PM IST

1. 'ஆன்மீக தொலைக்காட்சிக்கு அதிமுக ஆட்சியில் நிதி ஒதுக்கப்படவில்லை'

ஆன்மீக தொலைக்காட்சிக்கு அதிமுக ஆட்சிக்காலத்தில் அரசாணைப் போடப்பட்டதே தவிர, அதற்காக ஒரு ரூபாயைக் கூட அந்த அரசு ஒதுக்கவில்லை என அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார்.

2. விநாயகர் சதுர்த்திக்கு தடை ஏன்? அமைச்சர் சேகர்பாபு விளக்கம்

ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் பெயரில் விநாயகர் சதுர்த்தி நடத்த தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு விளக்கமளித்துள்ளார்.

3. மாணவர்களுக்கு லேப்டாப் இலவசம்

தோல் தொழில்நுட்பப் பயிலகத்தில் சேரும் மாணவா்களுக்கு லேப்டாப் இலவசம் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது..

4. 'பள்ளிகள் திறந்ததாலேயே மாணவர்கள் ஆசிரியர்களுக்கு தொற்று என்பது தவறான கருத்து'

கேரளாவைச் சுற்றியுள்ள ஒன்பது மாவட்டங்களில் 100 விழுக்காடு தடுப்பூசி போட மத்திய அரசிடம் கூடுதலாக மருந்துகள் கேட்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

5. உள்ளாட்சித் தேர்தலுக்கு கால அவகாசம் கோரும் நேரு

வார்டு மறுவரையறை பணிகள் நடைபெற்றுவருவதால் உள்ளாட்சித் தேர்தலுக்கு கால அவகாசம் கேட்கப்பட்டுள்ளது.

6. கோவையில் மீண்டும் தளர்வில்லா ஊரடங்கு: வெறிச்சோடிய சாலைகள்

மாநகராட்சிப் பகுதிகளில் அத்தியாவசிய பெருள்களின் கடைகளைத் தவிர பிற கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் போட்ட உத்தரவினால் கோவையின் முக்கியப் பகுதிகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

7. பிரிட்ஜில் குழந்தை பலி - விளையாடியபோது நேர்ந்த சோகம்

கேரளாவில் குளிர்சாதனப்பெட்டியின் பின்னால் ஒளிந்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தை மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

8. போதையில் தகராறு: மனைவியைக் கத்தியால் குத்தியவர் கைது

சென்னையில் குடிபோதையில் இருந்த தம்பதிக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக மனைவியைக் கத்தியால் குத்திய கணவரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

9. ஜெ. நினைவிடத்தில் மரியாதை செலுத்திய தலைவி!

'தலைவி' திரைப்படம் வரும் 10 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் நடிகை கங்கனா ரனாவத் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.

10. இந்தியா பதக்க வேட்டை: துப்பாக்கிச் சுடுதலில் தங்கம், வெள்ளி

பாரா ஒலிம்பிக்கில் இன்றும் இந்தியா தனது பதக்க வேட்டையை நிகழ்த்தியுள்ளது. அதன்படி, தலா ஒரு தங்கம், வெள்ளி பதங்கங்கள் கிடைத்துள்ளன.

ABOUT THE AUTHOR

...view details