தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஒரு மணி செய்திச்சுருக்கம் Top 10 news @ 1 PM - தமிழ்நாடு செய்திகள்

ஈடிவி பாரத்தின் மதியம் 1 மணி செய்திச்சுருக்கம்

top ten news at 1 pm  top ten news  top news  tamilnadu news  tamilnadu latest news  latest news  news updates  top ten  செய்திச்சுருக்கம்  1 மணி செய்திச்சுருக்கம்  ஈடிவி பாரத்தின் 1 மணி செய்திச்சுருக்கம்  தமிழ்நாடு செய்திகள்  முக்கியச் செய்திகள்
செய்திச்சுருக்கம்

By

Published : Jul 10, 2021, 12:48 PM IST

1. தடுப்பூசிகள் தயார் செய்தால் இந்தியாவிற்கே சப்ளை செய்யலாம்-மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்

தமிழ்நாட்டில் கரோனா தடுப்பூசிகள் தயார் செய்தால் இந்தியாவிற்கு உற்பத்தி செய்து கொடுக்கலாம் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

2. ஓய்வூதியதாரர்களுக்கு குடும்ப நல நிதி- ரூ.25 கோடி விடுவிப்பு

ஓய்வூதியதாரர்களுக்கு குடும்ப நல நிதி வழங்குவதற்காக முதற்கட்டமாக ரூ.25 கோடியை விடுவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

3. ’கரோனா பரவல் மக்களின் பொருளாதாரத்தை புரட்டிப் போட்டுள்ளது’ - அமைச்சர் சாமிநாதன் கவலை!

கரோனா பரவல் அரசிற்கு சவாலாகவும் மக்களின் பொருளாதாரத்தை புரட்டிப்போடும் அளவிற்கு இருப்பதாகவும் பொள்ளாச்சியில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார்.

4. தூத்துக்குடியில் பயிர் கடன் வழங்கும் விழா!

விளாத்திகுளம் அருகே விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்கும் விழா நடைப்பெற்றது.

5. செங்கல்பட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஊரக தொழிற்துறை அமைச்சர்

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம் சார்பாக பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ அன்பரசன் வழங்கினார்.

6. கீழடியில் உறை கிணறு கண்டுபிடிப்பு!

கீழடியில் நடைபெற்றுவரும் தமிழ்நாடு தொல்லியல் துறையின் ஏழாம் கட்ட அகழாய்வில் புதிய உறை கிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

7. பரப்பன அக்ரஹாரா சிறையில் ரெய்டு!

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலை உள்பட 8 இடங்களில் மத்திய குற்ற பிரிவு காவலர்கள் தீவிர சோதனை நடத்தினர்.

8. பி.ஹெச்டி மாணவியிடம் லஞ்சம்- பேராசிரியைக்கு 3 ஆண்டு சிறை!

பி.ஹெச்டி மாணவியிடம் லஞ்சம் பெற்ற பேராசிரியைக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கர்நாடக லோக் அயுக்தா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பொன்றை வழங்கியுள்ளது.

9. கோயம்புத்தூரில் அரிவாளால் தாக்கிய இளைஞர்கள்: ஒருவர் கைது

கோயம்புத்தூரில் அரிவாளால் தாக்கும் இளைஞர்களின் சிசிடிவி காட்சிகள் கிடைக்கப் பெற்ற நிலையில், அச்சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

10. 'மாநாடு' படப்பிடிப்பு நிறைவு: கேக் வெட்டி கொண்டாடிய சிம்பு

சிம்பு நடிப்பில் உருவாகி வரும் 'மாநாடு' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details