தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 8, 2020, 4:57 PM IST

ETV Bharat / state

5 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @5PM

ஈடிவி பாரத்தின் 5 மணி செய்திச் சுருக்கம் இதோ...

5 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @5PM
5 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @5PM

1.இந்தியா முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் விவரம்

இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இரண்டு லட்சத்து 56 ஆயிரத்து 611 ஐ எட்டியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

2.'சீனாவில் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டால், அவை உலக சந்தைக்குக் கொண்டுவரப்படும்!'

கரோனா நோய்க் கிருமியின் தாக்கம் குறித்து சீனா வெளியிட்டுள்ள அறிக்கையில், பெய்ஜிங் நகர நிர்வாகம், உலக சுகாதார மையத்துக்குச் சரியான நேரத்தில் மற்றும் வெளிப்படையான முறையில் நோயின் தாக்கம் குறித்த தகவல்களை வழங்கியது என்றும்; தடுப்பூசி தயாரிப்பு மற்றும் மருத்துவ பரிசோதனைகள் தொடர்பான சர்வதேச ஒத்துழைப்பில் பெய்ஜிங் ஈடுபட்டுள்ளது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

3.ஊரடங்கால் குடும்ப வன்முறை அதிகரிப்பு: மறுப்பு தெரிவித்த மத்திய அமைச்சர்

டெல்லி: ஊரடங்கால் குடும்பங்களில் நிகழும் வன்முறை அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

4.கோவிட்-19 இறப்பு விகிதம்: முதலிடத்தில் குஜராத்!

அதிக எண்ணிக்கையிலான கோவிட்-19 இறப்புகள் ஆரம்பத்தில் மகாராஷ்டிராவில் 2.84 விழுக்காடு பதிவாகியிருந்தன. இருப்பினும், தற்போது அது 3.55 விழுக்காடாக உள்ளது. மகாராஷ்டிராவுடன் ஒப்பிடும்போது குஜராத்தில் கோவிட்-19 நோயாளிகள் குறைவாக இருந்தாலும், இறப்பு விகிதம் 6.22 விழுக்காடாக உள்ளது.

5.80 நாள்களுக்கு பின் திறக்கப்பட்ட திருப்பதி!

ஹைதராபாத்: ஊரடங்கு காரணமாக மூடப்பட்டிருந்த திருப்பதி கோயில், சுமார் 80 நாள்களுக்கு பின் திறக்கப்பட்டுள்ளது.

6.குறையாத கரோனா - உணவகங்களில் அமர்ந்து உண்ண அனுமதியில்லை

சென்னை: இன்று முதல் உணவகங்களில் அமர்ந்து உண்ண அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், பெரும்பாலான கடைகளில் இந்த சேவை தொடங்கப்படவில்லை.

7.கரோனா கொள்ளை: இரண்டு தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.16 லட்சம் அபராதம்!

மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் இரண்டு தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.16 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பல நாட்களாக இந்த மருத்துவமனைகள் மீது பொதுமக்களிடமிருந்து புகார்கள் வந்ததையடுத்து, தானே மாநகராட்சி நிர்வாகம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.

8.கரோனா சூழல் கட்டுக்குள் வந்த பின் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள்: தலைவர் ஜாவித் தேபஸ்

கரோனா சூழல் கட்டுக்குள் வந்த பின்னரே லா லிகா கால்பந்து போட்டிகளைக் காண ரசிகர்கள் மைதானத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என லா லிகா அமைப்பின் தலைவர் ஜாவித் தேபஸ் தெரிவித்துள்ளார்.

9.82ஆவது நிமிடத்தில் கோல்... வெர்டரை வீழ்த்திய வொல்ஃபெர்க்...!

பண்டஸ்லிகா கால்பந்து தொடரில் வெர்டர் அணியை 0-1 என்ற கோல் கணக்கில் வொல்ஃப்பெர்க் அணி வீழ்த்தியது.

10.சோனு சூட்டுக்கு உத்தவ் தாக்கரே பாராட்டு

மும்பை: குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கு போக்குவரத்து வசதி செய்துதரும் நடிகர் சோனு சூட், மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவின் பாராட்டை பெற்றுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details