தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9PM

ஈடிவி பாரத்தின் இரவு 9 மணி செய்திச் சுருக்கம்

9 மணி செய்தி
9 மணி செய்தி

By

Published : Jul 23, 2021, 8:46 PM IST

1. முதலமைச்சர் தலைமையில் பட்டியலினத்தவர் உரிமைகளுக்கான கண்காணிப்புக்குழு

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தின்கீழ், மாநில அளவிலான உயர் நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக்குழுவானது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திருத்தி அமைக்கப்பட்டு, அரசு உத்தரவிட்டுள்ளது.

2. எண்ட் கார்டு இல்லாமல் தொடரும் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை!

ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு, மேலும் ஆறு மாதம் கால அவகாசம் நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

3.நீலகிரியில் கனமழை - இருளில் மூழ்கிய கிராமங்கள்!

நீலகிரியில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் ஏராளமான கிராமங்கள் கடந்த 24 மணி நேரத்திற்கும் மேலாக இருளில் மூழ்கி உள்ளன.

4. 3 அடி உயர தென்னை மரம்: குலைகுலையாய் காய்க்கும் தேங்காய்

மறையூர் கிராமத்தில் உள்ள 3 அடி உயர தென்னை மரத்தில் குலைகுலையாய் தேங்காய் காய்ப்பதை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.

4. ஜீன்ஸ் அணிந்ததால் சிறுமி கொலை: உத்தரப்பிரதேசத்தில் நடந்த கொடூரம்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஜீன்ஸ் அணிந்ததால், சிறுமி உறவினர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

5. இலங்கைத் தமிழர்களின் அடிப்படை வசதியை மேம்படுத்த வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டில் உள்ள முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களின் அடிப்படை வசதிகளையும் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்த வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

6. அஸ்ஸாம் மாநிலத்தில் ஆன்லைன் மதுவிற்பனை தொடக்கம்

கெளகாத்தி (அஸ்ஸாம்): அஸ்ஸாம் மாநிலத்தை ஆளும் பாஜக தலைமையிலான அரசு, ஆன்லைன் மதுவிற்பனையை அம்மாநிலத்தலைநகர் கெளகாத்தியில் தொடங்கியுள்ளது.

7. கனமழை: கர்நாடகாவில் வெள்ளப்பெருக்கு

கர்நாடகாவில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்துவருவதால், பல இடங்களில் வெள்ளப்பெருக்கு இடர் ஏற்பட்டுள்ளது.

8. நகர்ப்புற நக்சல் ஆகிறாரா சூர்யா?

ஒருவேளை ‘ஜெய் பீம்’ படம் சுதா பரத்வாஜ் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருந்தால், வலதுசாரி சிந்தனையாளர்கள் சூர்யாவை நகர்ப்புற நக்சல்கள் பட்டியலில் இணைத்துவிடுவார்கள்.

9. கோலாகலமாகத் தொடங்கியது டோக்கியோ ஒலிம்பிக்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாகத் தொடங்கியது.

10. சார்பட்டா பரம்பரை: முகமது அலிக்கு ஒரு காதல் கடிதம்

‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் எந்த அளவு முகமது அலியின் தாக்கம் இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள I am ali, The trials of muhammed ali போன்ற ஆவணப் படங்கள் உதவியாக இருக்கும். முகமது அலியை மிகவும் நேசித்ததன் விளைவாக ‘சார்பட்டா பரம்பரை’ படத்தை கொடுத்திருக்கிறார் பா. இரஞ்சித்.

ABOUT THE AUTHOR

...view details