தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @9am - tamil top news

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம் இதோ...

Top 10 news
Top 10 news

By

Published : Jun 7, 2020, 9:18 AM IST

  1. தமிழ்நாட்டில் புதிய விதிகளுடன் இயங்கத் தயாராகும் ஹோட்டல்கள்!

தமிழ்நாட்டில் ஹோட்டல்கள் புதிய விதிமுறைகளுடன் இயங்கத் தயாராகி வருகின்றன. கரோனா நெருக்கடிக்கு மத்தியில் ஹோட்டல்கள், எவ்வாறு செயல்பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு புதிய விதிகள் அறிவித்துள்ள நிலையில், அதன் இயக்க முறைகளை இச்செய்தியில் பார்க்கலாம்.

2. 'எட்டுவழிச்சாலை திட்டத்தை நிறைவேற்றத் துடிக்கும் பாஜக, அதிமுக அரசு' - ஸ்டாலின்

சேலம் எட்டுவழிச்சாலை திட்டத்தை நிறைவேற்றி, தமது சுயநலப் பசியை நிறைவேற்றிக் கொள்ள 'தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டம்' என பாஜக, அதிமுக அரசுகள் கை கோர்த்துள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சாடியுள்ளார்.

3. 'கேரள வனத்துறை மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு ஆதாரமற்றது'

கர்ப்பிணி யானையை மீட்கப் போதிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என வைக்கப்படும் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என கேரள வனத்துறை தெரிவித்துள்ளது.

4. தெலங்கானா முதலமைச்சரின் பண்ணை வீடு குறித்து ஆய்வு செய்ய சிறப்புக் குழு!

தெலங்கானா மாநில முதலமைச்சரின் மகன் வீடு ஓஸ்மான் சாகர் ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்ய சிறப்புக்குழுவை அமைத்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு உத்தரவிட்டுள்ளது.

5. பிரியங்கா காந்தியைக் கிண்டல் செய்த உ.பி. துணை முதலமைச்சர்!

ராகுல், பிரியங்கா காந்தி நல்ல கண் மருத்துவரைப் பார்க்க வேண்டும் என உத்தரப்பிரதேச துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மவுரியா தெரிவித்துள்ளார்.

6. ஹைட்ராக்ஸி குளோரோகுயினை பயன்படுத்தி கரோனாவைத் தடுக்கமுடியாது- ஆக்ஸ்போர்டு

மலேரியா, லூபஸ் மற்றும் முடக்கு வாதத்தை சரிசெய்ய பயன்படுத்தப்படும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தால் கரோனா வைரஸ் நோயைத் தடுக்கமுடியாது என ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

7. மணல் கொள்ளையால் தடம் மாறும் மேற்கு வங்க நதிகள்!

மணல் கொள்ளை, காடுகள் அழிப்புக் காரணமாக மேற்கு வங்க மாநிலத்தின் வடக்கு பகுதியில் உள்ள பல நதிக் கரைகள் சிதைந்து, நதியின் பாதை மாறிவிட்டதாக ராஜா ரவுட் என்ற இயற்கை ஆர்வலர் வேதனை தெரிவித்துள்ளார்.

8. அமெரிக்க ரியாலிட்டி ஷோவில் வாயைப் பிளக்க வைத்த இந்தியர்கள்!

கொல்கத்தாவைச் சேர்ந்த இரண்டு நடனக் கலைஞர்கள் "அமெரிக்காஸ் காட் டேலண்ட்" நிகழ்ச்சியில் தங்களது திறமைகளை வெளிக்காட்டி போட்டி நடுவர்களை வியக்க வைத்த சம்பவம் இந்தியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

9. 'ஒரு சான்ஸ் குடு' பாடல் உருவானது குறித்து கௌதம் மேனன்!

இயக்குநர் கௌதம் மேனன் 'ஒரு சான்ஸ் குடு' பாடல் உருவானது குறித்து மனம் திறந்துள்ளார்.

10. உலகை ஒன்றிணைக்கும் சக்தி விளையாட்டுக்கு உண்டு: சச்சின்

உலகை ஒன்றாக இணைக்கும் சக்தி விளையாட்டுக்கு உள்ளது என இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details