தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

4 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @4PM - சொத்து தகராறில் அண்ணனை வெட்டியவர்

ஈடிவி பாரத்தின் 4மணி செய்திச் சுருக்கம் இதோ...

Top 10 News of ETV Bharat - 4 PM
Top 10 News of ETV Bharat - 4 PM

By

Published : Jun 3, 2020, 3:52 PM IST

மும்பை மக்களே உஷார்

மகாராஷ்டிர மாநிலத்தில் நிசார்கா புயல் கரையை கடக்க தொடங்கியுள்ள நிலையில், மக்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதலை மும்மை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

'ஒவ்வொரு குடிபெயர்ந்த தொழிலாளருக்கும் ரூ.10,000 கொடுங்கள்' - மம்தா பானர்ஜி

கொல்கத்தா: ஒவ்வொரு குடிபெயர்ந்த தொழிலாளருக்கும் 10 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்குமாறு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.

'புலம்பெயர்ந்தோர் வீடு திரும்புவதை தாமதப்படுத்தும் கேரள அரசு'

அரபு நாடுகளிலிருந்து திரும்பும் புலம்பெயர்ந்தோரை தாமதப்படுத்த கேரள அரசு முனைவதாக வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி. முரளீதரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்தியாவின் பெயரை மாற்றக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

டெல்லி: இந்தியாவின் பெயரை 'பாரத்' என மாற்றக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அதன் விசாரணை இன்று நடைபெறவுள்ளது.

’திமுக பொருளாளராக துரைமுருகன் நீடிப்பார்’ - ஸ்டாலின்

சென்னை: திமுக பொதுக்குழுக்கூட்டத்தில் நேரடியாகப் பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்படும்வரை துரைமுருகன் திமுக பொருளாளராக நீடிப்பார் எனத் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

குமரியில் மேலும் ஒரு காதல் க்ரைம்: அச்சத்தில் தவிக்கும் பெற்றோர்

கன்னியாகுமரி: இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்வதாகக் கூறி புகைப்படம் எடுத்து மிரட்டி பணம் பறித்த இளைஞரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

பட்டாசு ஆலையில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு

விருதுநகர்: பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.

சொத்து தகராறில் அண்ணனை வெட்டியவர் கைது!

திண்டுக்கல்: சொத்து பிரச்னையில் ஏற்பட்ட தகராறில் தம்பி சொந்த அண்ணனை வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முத்துவேலர் நூலகத்தில் முத்தமிழறிஞர் பிறந்தநாள்

நாகப்பட்டினம்: மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சொந்த ஊரில் ஏழை மக்களுக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட அத்தியவாசிய பொருட்களை வழங்கி திமுகவினர் கொண்டாடினர்.

2022க்குள் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பு: மோடியின் இன்னொரு மாயை - அஹ்மத் படேல் சாடல்

சம்பா பயிர்களுக்கான புதிய விலையை மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளதை அடுத்து, அது விவசாயிகளுக்கு எந்தவிதத்திலும் உதவாது என காங்கிரஸ் மூத்தத் தலைவர் அஹ்மத் படேல் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், விவசாயிகள் கடந்துவரும் பிரச்னைகளுக்கு இது தீர்வாகாது என்றும் கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details