தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திகள் Top 10 news @ 9pm - 9 மணி செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் இரவு 9 மணி செய்திச் சுருக்கம்.

top 10 news @9 pm
top 10 news @9 pm

By

Published : Feb 28, 2021, 9:20 PM IST

இரண்டு தொகுதிகளில் கமல்ஹாசன் போட்டியிடுவதாகத் தகவல்

வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனர் கமல்ஹாசன் ஆலந்தூர் மற்றும் கோயம்புத்தூர் (தெற்கு) ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி நாளை ஆலோசனை

சென்னை: அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நாளை ஆலோசனை நடத்துகிறார்.

மேலும் 479 பேருக்கு கரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் மேலும் 479 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவித்துள்ளது.

2021-இல் 14 திட்டங்கள் இலக்கு: இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்

2021ஆம் ஆண்டில் 14 விண்வெளித் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என இஸ்ரோ அமைப்பின் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

மியான்மர் ராணுவத்திற்கு எதிரான பேச்சு; ஐநா தூதர் நீக்கம்

மியான்மர் ராணுவத்திற்கு எதிரான கருத்துகளைத் தெரிவித்த ஐநா தூதர் கியோவ் மோ துன்-ஐ அந்நாட்டு ராணுவம் நீக்கியுள்ளது.

ஏப்ரல் 14-இல் வெளியாகிறது ‘துக்ளக் தர்பார்’!

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடித்துள்ள துக்ளக் தர்பார் திரைப்படம் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

கர்ணன் இரண்டாவது பாடல் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

அண்மையில் வெளியான கர்ணன் திரைப்படத்தின் 'கண்டா வரச்சொல்லுங்க' என்ற பாடலை மக்கள் கொண்டாடிவரும் சூழ்நிலையில், இரண்டாவது பாடல் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கொல்ல முயற்சி செய்த மாற்றுத்திறனாளி கணவர் - மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த மனைவி!

தன்னை கொலை செய்ய முயற்சித்த மாற்றுத்திறனாளி கணவரை, மண்ணெண்ணெய் ஊற்றி மனைவி எரித்துக் கொலை செய்த சம்பவம் ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிங்கப்பூர் ஓபன்: சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார் போபிரின்!

சிங்கப்பூர் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸி போபிரின் 4-6, 6-0, 6-2 என்ற செட் கணக்கில் கஜகஸ்தானின் அலெக்ஸாண்டர் புப்ளிக்கை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைத் தட்டிச்சென்றார்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முன்னேறும் பட்சத்தில், இந்தாண்டு நடைபெற இருந்த ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஒத்திவைக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details