தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9PM - top 10 news etv bharat tamil

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம்.

top-10-news-at-9pm
top-10-news-at-9pm

By

Published : Jul 21, 2020, 9:02 PM IST

தமிழ்நாட்டில் 1.80 லட்சத்தைக் கடந்த கரோனா பாதிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 80 ஆயிரத்து 643ஆக அதிகரித்துள்ளது.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் ஸ்டாலின் பதிலளிக்க உத்தரவு!

சென்னை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேசியதற்காக ரூ.1 கோடி இழப்பீடு கோரி துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தொடர்ந்த வழக்கில் மு.க. ஸ்டாலின் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மின் கட்டண உயர்வு: தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் கறுப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்!

சென்னை: மின் கட்டண உயர்வைக் கண்டித்து கோவை, தூத்துக்குடி, அரியலூர், கடலூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் திமுகவினர் வீடுகளில் கறுப்புக் கொடி கட்டியும், கைகளில் கறுப்புக் கொடி ஏந்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கரோனாவால் தள்ளிப் போகும் பொதுத்தேர்வுகள்; என்ன செய்கிறார்கள் போட்டித் தேர்வர்கள்?

பொருளாதார சமமின்மை ஆன்லைன் கல்விக்கு மிகப் பெரிய தடையாக இருக்கிறது. போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவதை மட்டுமே லட்சியமாகக் கொண்டு, இரவு பகலாக படித்த மாணவர்களுக்கு இந்த இடைவெளி கசப்பான, சோர்வளிக்கும் அனுபவம்தான்

கோவிட்-19 எதிரொலி: அமர்நாத் யாத்திரை ரத்து!

கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக, இந்தாண்டு (2020) அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேசம்: கோயில் தகராறில் ஒருவர் அடித்துக் கொலை!

லக்னோ: உத்தரப் பிரதேசத்தின் சாந்த் கபீர்நகர் மாவட்டத்திலுள்ள ஒரு கோயிலில் சிவ லிங்கத்தை கிணற்றின் அருகே வைப்பதா? வேண்டாமா? என்பது தொடர்பான தகராறில் ஒருவர் அடித்துகொல்லப்பட்டார். நான்கு பேர் படுகாயம் அடைந்தனர்.

ஐசியூவில் வென்டிலேட்டர் இல்லையா... மருத்துவர்களைத் தாக்கிய நோயாளியின் உறவினர்கள் கைது!

லக்னோ: ஏஎம்யூ மருத்துவமனையில் சுவாசக் கோளாறு பிரச்னையிருந்த நபருக்கு சிகிச்சைக்காக வென்டிலேட்டர் இல்லை எனக் கூறிய மருத்துவர்களை உறவினர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'மாநாடு' பட அப்டேட்டை வெளியிட்ட தயாரிப்பாளர்!

கரோனா தொற்று காரணமாக படப்பிடிப்புகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், நடிகர் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தின் தயாரிப்பாளர் படத்தின் அப்பேட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் தொடர் - உறுதிப்படுத்திய பிரிஜேஷ் படேல்

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் அனைத்து போட்டிகளும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுமென அதன் நிர்வாக குழு தலைவர் பிரிஜேஷ் படேல் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஐசிஎம்ஆர் வெளியிட்ட புதிய வழிகாட்டுதல் என்ன சொல்கிறது?

வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு 17 நாள்களுக்கு பிறகு கரோனா அறிகுறிகள் தென்படாத நோயாளிகள் பணிக்கு திரும்பலாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் வெளியிட்ட புதிய வழிகாட்டுதலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details