தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9PM - top 10 news etv bharat tamil

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம்.

top-10-news-at-9pm
top-10-news-at-9pm

By

Published : Jul 14, 2020, 9:18 PM IST

மருத்துவ மாணவர் சேர்க்கை: அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு

மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

காவிரியிலிருந்து 177.25 டி.எம்.சி தண்ணீர் திறக்க தமிழ்நாடு அரசு வலியுறுத்தல்

சென்னை: மாநிலத்திற்கு 177.25 டி.எம்.சி தண்ணீர் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாட்டின் சார்பாக காவேரி நீர் முறைப்படுத்தும் குழுவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாவட்டங்களில் அதிகரிக்கும் கரோனா தொற்று- பீதியில் பொதுமக்கள்

சென்னை: தமிழ்நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கைஒரு லட்சத்து 47 ஆயிரத்து 324 ஆக அதிகரித்துள்ளது. மேலும், தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்து 99 ஆக அதிகரித்துள்ளது.

தேர்தல் நடத்தும் விதிமுறைகளில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள சட்டத் திருத்தங்களை திரும்பப் பெற வேண்டும் - வைகோ

சென்னை : தேர்தல் நடத்தும் விதிமுறைகளில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள சட்டத் திருத்தங்களை உடனே திரும்பப் பெற வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற மேலவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார்.

சென்னையில் மருத்துவ முகாம்கள் மூலம் 10 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை!

சென்னை: இதுவரை 15 மண்டலங்களில் நடைபெற்ற முகாம்களில் 10 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

கரோனாவால் உயிரிழந்தவர் உடலை டிராக்டர் மூலம் எடுத்துச் சென்ற மருத்துவர்!

ஹைதராபாத்: கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவரை அடக்கம் செய்ய எடுத்து செல்ல அச்சம் நிலவியதால், தெலங்கானா மருத்துவர் ஒருவர் டிராக்டரில் எடுத்துச் சென்றுள்ளார்.

பாலியல் புகாரில் சிக்கிய பாதிரியாருக்கு கரோனா பாதிப்பு!

கொச்சி: கன்னியாஸ்திரி அளித்த பாலியல் புகாரில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பாதிரியார் ஃபிராங்கோ முல்லக்கலுக்கு கோவிட்-19 பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அவருக்கு வழங்கப்பட்டிருந்த பிணையை நீதிமன்றம் ரத்து செய்தது.

50 வாரிசுகள்... 107ஆவது பிறந்தநாள்... கேக் வெட்டி கொண்டாடிய கருப்பையா தாத்தா!

வாரிசுகளுடன் முதியவர் ஒருவர் தனது 107ஆவது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய சம்பவம் புதுக்கோட்டையில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கணவருடன் லண்டனுக்குப் பறந்த சோனம் கபூர்

மும்பை: பாலிவுட் நடிகை சோனம் கபூர் தனது கணவருடன் லண்டனுக்கு சென்றுள்ளார்.

WC19: பைனலில் சூப்பர் ஓவருக்கு முன்பு சிகரெட் பிடித்த பென் ஸ்டோக்ஸ்!

லண்டன்: உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் சூப்பர் ஒவர் முன்பு பென் ஸ்டோக்ஸ் சிகரெட் பிடித்தாக புதிய சர்ச்சை ஒன்று எழுந்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details