தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9PM - சாம்பியன்

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம்.

9pm
9pm

By

Published : Oct 16, 2020, 9:31 PM IST

என் கோரிக்கை விஜய் சேதுபதி ஏற்றுக்கொள்வார் என நம்புகிறேன்: தோழர் தியாகு

இலங்கை கிரிகெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான ‘800’இல் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறார். இதன் ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில், தமிழ் மக்கள் சார்பிலும், பல்வேறு தமிழ் அமைப்புகள் சார்பிலும் இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக்கூடாது என்ற குரல் வலுத்து வருகிறார். இச்சூழலில் இந்த திரைப்படம் குறித்து தமிழ்தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தியாகு தனது கருத்த தெரிவித்துள்ளார்.

1 மாதத்தில் 12 பேர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்: குமரி மாவட்ட எஸ்.பி. அதிரடி!

குமரி மாவட்ட எஸ்.பி. பத்ரிநாராயணனின் அதிரடி நடவடிக்கையால் கடந்த ஒரு மாத காலத்திற்குள் குண்டர் சட்டத்தில் 12 குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டனர்.

உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி காவல்துறை வெளியிட்ட குறும்படம்!

தென்காசி: கிராமப்புறங்களில் கண்காணிப்பு கேமரா வைப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி தயாரிக்கப்பட்ட குறும்படத்தை நெல்லை சரக டிஐஜி பிரவீன்குமார் அபினபு பார்வையிட்டார்.

'முதலமைச்சர் யோகிக்கு புகைப்படங்கள் எடுக்க மட்டும் நேரம் உள்ளது' - பிரியங்கா காந்தி

உத்தரப் பிரதேசத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பெண்களுக்கு எதிராக 13 குற்றங்கள் நடந்துள்ளன. இதைப்பற்றி ஆலோசனை மேற்கொள்வதற்கு முதலமைச்சர் யோகிக்கு நேரம் இல்லை. ஆனால் புகைப்படங்கள் எடுக்க நேரம் இருக்கிறது என பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.

அரசை எதிர்த்து போராட்டம்: கூரையின் மேல் உண்ணாவிரதம் இருக்கும் மூதாட்டி

பெங்களூரு: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியை அரசு கண்டுகொள்ளாததால் வீட்டில் கூரையின் மேல் அமர்ந்து மூதாட்டி ஒருவர் உண்ணாவிரதப் போராட்டம் செய்துவருகிறார்.

அன்பு அம்ரிதாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

சிங்கப்பெண்னே

'நோட்டா' இயக்குநருடன் விஷால் - ஆர்யா கூட்டணி!

ஹைதராபாத்: விஷால் - ஆர்யா நடிப்பில் உருவாக உள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.

கொல்கத்தாவை காப்பாறிய கம்மின்ஸ்... மும்பைக்கு 149 ரன்கள் இலக்கு!

அபுதாபி: மும்பை அணிக்கு வெற்றிபெற கொல்கத்தா அணி 149 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தத்தை நீட்டிக்க புதின் விருப்பம்!

2010 ஆம் ஆண்டில் அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மற்றும் ரஷ்ய தலைவர் டிமிட்ரி மெட்வெடேவ் ஆகியோரால் கையெழுத்திடப்பட்ட தி நியூ ஸ்டார்ட் ஒப்பந்தத்தின் ஆண்டு நீட்டிப்பை விளாடிமிர் புதின் முன்மொழிந்தார்.

நவம்பர் மூன்றாவது வாரத்தில் கரோனா தடுப்பூசி கண்டுபிடிக்க வாய்ப்பு!

ஃபைசர் இங்க் நிறுவனம் சார்பாக தயாரிக்கப்பட்டு வரும் கரோனா தடுப்பூசியை அவசர கால பயன்பாடாக அனுமதிக்க நவம்பர் மூன்றாம் வாரத்திற்கு முன்னதாக கோரிக்கை விடுக்க முடியாது என அந்த நிறுவனத்தில் சிஈஓ ஆல்பர்ட் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details