தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9PM - international

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம்.

9 pm
9 pm

By

Published : Aug 10, 2020, 9:15 PM IST

செப்டம்பர் இறுதிவரை பயணிகள் ரயில் சேவை ரத்து?

கரோனா பரவலைத் தடுக்கும் முக்கிய நடவடிக்கையாக நாடு முழுவதும் பொதுப் போக்குவரத்து கடந்த மார்ச் மாத இறுதியில் நிறுத்திவைக்கப்பட்டது. விமானப் போக்குவரத்து சேவை படிப்படியாகத் தற்போது செயல்பட்டுவரும் நிலையில், பயணிகள் ரயில்வே சேவை ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.

புதிய வகை வெட்டுக்கிளி இனத்திற்கு கேரள ஆராய்ச்சியாளரின் பெயர்!

புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட வெட்டுக்கிளி இனத்திற்கு இந்தியாவில் பாதுகாப்பு ஆராய்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பாற்றிய கேரள ஆராய்ச்சியாளரின் பெயரிடப்பட்டது.

கேரள தங்கக் கடத்தல் விவகாரம்: துபாயில் என்ஐஏ தீவிர விசாரணை

டெல்லி: கேரள தங்கக் கடத்தில் விவகாரம் தொடர்பாக முக்கியக் குற்றவாளி பாசில் பரீத்தை தேசிய புலனாய்வு முகமை தீவிரமாக விசாரித்துவருகிறது.

ஈராக்கின் நடவடிக்கையால் கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம்

டெல்லி : கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைக்க ஈராக் திட்டமிட்டுள்ளதால் சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை உயரும் அபாயம் எழுந்துள்ளது.

'ரூ.10 ஆயிரம் கோடி சிறப்பு நிதித் திட்டம் விரைவில் நடைமுறைக்கு வரும்'

டெல்லி: பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கையின் முக்கிய முன்னெடுப்பாக சிறு, குறு நிறுவனங்களுக்கான 10 ஆயிரம் கோடி ரூபாய் சிறப்பு நிதித் திட்டம் விரைந்து செயல்படுத்தப்படும் என பாரத ஸ்டேட் வங்கி தலைவர் ரஜ்னீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் 3 லட்சத்தைத் தாண்டிய கரோனா பாதிப்பு!

சென்னை: தமிழ்நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 2 ஆயிரத்து 815ஆக உயர்ந்துள்ளது.

'சத்யா' பட பாடல் ரீமேக்: இது வெறும் மலரும் நினைவுகள் அல்ல; மாறா அன்பு - கமல் ஹாசன் ட்வீட்

'சத்யா' படத்தின் பாடலை ரீமேக் செய்த குழுவினருக்கு நடிகர் கமல் ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஹாக்கி வீரர் மந்தீப் சிங்கிற்கு கரோனா!

இந்திய ஹாக்கி அணியின் நட்சத்திர வீரர் மந்தீப் சிங்கிற்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய விளையாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நோக்கியா 5310: பழமை விரும்பிகளை கவரவரும் புது பியூச்சர் போன்

ஃபின்லாந்து நாட்டின் நோக்கியா நிறுவனம், தொடுதிரை கைபேசிகள் வரவுக்கு முன்னால் சந்தையில் நற்பெயர் பெற்ற நோக்கியா 5310 எக்ஸ்பிரஸ் மியூசிக்கின் புதிய 2020 பதிப்பை ரூ.3,399 விலையில் சந்தைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

'மெட்ராஸ்' ரித்விகாவின் ஸ்டைல் புகைப்படங்கள்!

என் உதட்டு வரிகளைக் கொண்டு கவிதை எழுதவா?

ABOUT THE AUTHOR

...view details