தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9 AM - Top 10 news etv bharat

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம் இதோ...

top-10-news-at-9am
top-10-news-at-9am

By

Published : Jun 17, 2020, 9:04 AM IST

இந்தியா-சீனா மோதல்: உஷார்நிலையில் இமாச்சலப் பிரதேசம்!

சிம்லா: இந்திய-சீன படைகளுக்கு இடையே லடாக் எல்லையில் பயங்கர மோதல் நிலவிவரும் சூழலில், சீனாவையொட்டியுள்ள இமாச்சலப் பிரதேசத்தின் எல்லை மாவட்டங்கள் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

பெண்ணுடன் உறவில் இருந்தவரை சிறுநீர் குடிக்கவைத்த கும்பல் கைது!

ஜெய்ப்பூர்: பெண்ணுடன் உறவில் இருந்தவரை வலுக்கட்டாயமாகச் சிறுநீர் குடிக்கவைத்த ஆறு பேர் கைதுசெய்யப்பட்டு அவர்களிடம் விசாரிக்கப்பட்டுவருகிறது.

கோவிட்-19 பாதிப்பாளர்களை மரணத்திலிருந்து காக்கும் ஸ்டீராய்டு மருந்துகள்!

லண்டன்: கோவிட்-19 நோய்த்தொற்று காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்களையும் ஸ்டீராய்டு மருந்துகள் காக்கும் என இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

சென்னையில் 478 மருத்துவ முகாம்கள்...! - மாநகராட்சி ஆணையர்

சென்னையில் மொத்தம் 478 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் கோ. பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

ஜூன் 30 வரை ரயில்வே முன்பதிவு மையங்கள் மூடல்!

சென்னை: சென்னை மண்டலத்தில் திறக்கப்படவிருந்த 19 ரயில் முன்பதிவு மையங்கள் ஜூன் 30ஆம் தேதி வரை மூடப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

வீடுகளிலிருந்து பணிபுரிய நீதிபதிகளுக்கு அனுமதி!

சென்னை: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஜூன் 30ஆம் தேதி வரை நீதிபதிகள் வீடுகளிலிருந்து பணியாற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

'அரசு மருத்துவமனையில் தனி அறை வேண்டும்' - அடம்பிடிக்கும் ரவுடி பேபி சூர்யா!

திருப்பூர்: தனக்கு அரசு மருத்துவமனையில் தனி அறை வேண்டும் என டிக்டாக் புகழ் ரவுடி பேபி அடம்பிடித்துள்ளார்.

ஐபிஎல் போட்டிகள் நிச்சயம் நடத்தப்படும் - பிசிசிஐ உறுதி

மும்பை: செப்டம்பர், நவம்பர் மாதங்களில் பெங்களூரு, சென்னை கிரிக்கெட் மைதானங்களில் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையில் கால்பதித்த ஹெச்.சி.எல். - புதிதாக 1,500 வேலைவாய்ப்புகள்!

கொழும்புவில் கால்பதித்த 18 மாதங்களுக்குள் புதிய பணியாளர்கள், அனுபவம் வாய்ந்த தொழில் வல்லுநர்கள் என 1,500-க்கும் மேற்பட்ட உள்ளூர் வேலைவாய்ப்புகளை உருவாக்க ஹெச்.சி.எல். நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

'இந்தியா அத்துமீறி தாக்குதல்' - சீனா குற்றச்சாட்டு

பெய்ஜிங்: சீனப் படையினர் மீது இந்திய ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதாக அந்நாடு குற்றஞ்சாட்டியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details