தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9 AM - international

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம்.

9pm
9pm

By

Published : Sep 14, 2020, 9:45 AM IST

சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி தலைமை நீதிபதிக்கு கடிதம்!

நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்டுவரும் மாணவர்கள் தொடர்பான விவகாரத்தில் நடிகர் சூர்யா கருத்து தெரிவித்திருந்தார். இக்கருத்து நீதிமன்றத்தை விமர்சிக்கும் வகையில் இருப்பதால் நடிகர் சூர்யா மீது நடவடிக்கை கோரி சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு, நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் கடிதம் எழுதியுள்ளார்.

ஜிஎஸ்டி நிலுவைக்கான கடன் வசதி; 13 மாநிலங்கள் ஒப்புதல்!

சரக்கு சேவை வரியில் பற்றாக்குறையை சந்தித்துள்ள மாநிலங்களின் நிதி நெருக்கடியை சமாளிக்கும் வகையில் மத்திய அரசு சிறப்பு கடன் தொடர்பான திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்துக்கு 13 மாநிலங்கள் ஒப்புதல் அளித்துள்ளன. இது குறித்து ஈடிவி பாரத் துணை செய்தி ஆசிரியர் கிருஷ்ணானந்த் திரிபாதி விவரிக்கிறார்.

டெல்லி கலவரம்; ஜே.என்.யூ., முன்னாள் மாணவர் உமர் காலித் கைது!

வடகிழக்கு மாநிலங்களில் நடந்த கலவர வழக்கில் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் மாணவர் உமர் காலித் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர்: 47 பொருள்களில் விவாதம்!

டெல்லி: இன்று (செப்.14) தொடங்கவுள்ள நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரில் 45 மசோதாக்கள், நிதி தொடர்பான 2 விஷயங்கள் உள்பட 47 பொருள்கள் பற்றி விவாதிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற விவகாரத் துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

'உயிருக்கு பயந்து காணொலி மூலம் செயல்படும் நீதிமன்றம் மாணவர்களை தேர்வு எழுத சொல்கிறது' - சூர்யா காட்டம்

நீட் அச்சம் காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது குறித்து நடிகர் சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஆந்திராவில் நிர்வாணமாக சென்று கொலை செய்த நபர் கைது!

பெங்களூரு: ஆந்திர பிரதேச மாநிலத்தில் நிர்வாணமாக சென்று கொலை செய்த நபரை காவல் துறையினர் கைது செய்தனர்.

நாடாளுமன்றம் விவாவதத்திற்கான இடம்: சீனப் பிரச்னை பற்றி பிரதமர் விளக்கமளிக்க வேண்டும்...!

டெல்லி: நாடாளுமன்றத்தில் சீன எல்லை விவகாரம் பற்றி பிரதமர் விளக்கமளிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

"ரஜினி முதலமைச்சர் வேட்பாளராக நின்றால் மட்டுமே ஆதரவு" - ராகவா லாரன்ஸ்

நடிகர் ரஜினிகாந்த் முதலமைச்சர் வேட்பாளராக நின்றால் மட்டுமே ஆதரவு தருவேன் என்று ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

டூட் அகல்யா வெங்கடேசனின் அடிதூள் பிக்ஸ்

சும்மா அள்ளூது டூட்.. அழகு...!

ஐபிஎல் 2020: பலமும்...! பலவீனமூம்...! சென்னை சூப்பர் கிங்ஸ்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து மகேந்திர சிங் தோனி ஓய்வை அறிவித்த பின், அவர் ஐபிஎல் விளையாடவுள்ளதால், ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களின் கவனம் முழுவதும் சிஎஸ்கே அணியின் மீது திரும்பியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details