தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9 AM - national

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம்.

9 am
9 am

By

Published : Sep 12, 2020, 9:26 AM IST

மதுரை: நீட் தேர்வு பயத்தால் மாணவி தூக்கிட்டுத் தற்கொலை?

மதுரை: தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர் நீட் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்த வேளையில் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளார்.

ஸ்பைஸ்ஜெட் விமான போக்குவரத்து தலைவர் 3 மாதங்களுக்கு இடைநீக்கம்!

டெல்லி: ஸ்பைஸ்ஜெட் விமான போக்குவரத்து தலைவர் அரோராவை மூன்று மாதங்களுக்கு பணியிடைநீக்கம் செய்து விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

உயர் கல்வி நிலையங்களில் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய தனிப்பிரிவு!

சென்னை: உயர் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் தனி புகார் பிரிவு அமைக்கப்பட்டதை உறுதிசெய்ய வேண்டும் எனப் பல்கலைக்கழக மானியக் குழு அறிவுறுத்தியுள்ளது.

அப்போ 'ஓசி பிரியாணி' அவங்க, இப்போ 'ஓசி டீ' இவங்க...! கடையை அடித்து நொறுக்கிய தேமுதிக தேநீர் பிரியர்!

சென்னை: தேநீர் குடித்துவிட்டு காசு தராமல் கடையை அடித்து நொறுக்கிய தேமுதிக வட்டச் செயலாளரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள்: ஆவணப்படுத்தும் மத்திய சுகாதார அமைச்சகம்

கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்த தரவுகளை ஆவணப்படுத்தும் ஒரு பயிற்சியை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தொடங்கியுள்ளது.

நடிகர் அப்தாப் சிவதசனிக்கு கரோனா!

நடிகர் அப்தாப் சிவதசனி தனக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நடிகை ராகினி திவேதி முன்பிணை விசாரணை ஒத்திவைப்பு

பெங்களூரு: கன்னட நடிகை ராகினி திவேதியின் முன்பிணை விசாரணை செப்டம்பர் 14ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ரெய்னாவின் இடத்திற்கு ராயுடுவே சரி: ஸ்காட் ஸ்டைரிஸ்!

ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணியின் சின்ன தல ரெய்னா விலகிய நிலையில், அவரது மூன்றாவது இடத்திற்கு ராயுடுவே சரியான நபர் என நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ் தெரிவித்துள்ளார்.

ஜோர்டன் ராணுவ சேமிப்புக் கிடங்கில் வெடி விபத்து

அம்மான்: ஜோர்டன் ராணுவ சேமிப்புக் கிடங்கில் அடுத்தடுத்து நிகழ்ந்த வெடி விபத்தால் தீப்பிடித்து எரிந்தது.

சவுதி அரசரைக் காப்பாற்றியதே நான்தான் - ட்ரம்பின் சர்ச்சைப் பேச்சை வெளியிட்ட எழுத்தாளர்

செய்தியாளர் ஜமால் கஷோகி கொலை விவகராத்தில் சவுதி அரசரைக் காப்பாற்றியது நான்தான் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பேசியதாக எழுத்தாளர் பாப் வுட்வேர்ட் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details