தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 News @ 9 pm - அண்மை செய்திகள்

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம்.

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 News @ 9 pm
9 மணி செய்திச் சுருக்கம் Top 10 News @ 9 pm

By

Published : Jun 24, 2021, 8:49 PM IST

1. வரதட்சணை தீயில் கருகிய விஸ்மயா- நடந்தது என்ன?

கேரள ஆயுர்வேத மருத்துவர் விஸ்மயாவின் சர்ச்சைக்குரிய மரணம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இது தொடர்பாக காவல்துறை விசாரணையை முடுக்கியுள்ள நிலையில், பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன.

2.நாய் இனத்தின் பெயர்களை கூறி 4 வயது சிறுவன் சாதனை!

தஞ்சாவூர்: 100 நாய்கள் இனத்தின் பெயர்களை 4 வயத சிறுவன் 54 நொடிகளில் கூறி கலாம்ஸ் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

3.அமர்நாத் பனி லிங்கத்துக்கு பிரதான பூஜை!

ஜம்மு காஷ்மீர் அமர்நாத் பனி லிங்கத்துக்கு ஆண்டின் முதல் பிரதான பூஜை பௌர்ணமி தினமான வியாழக்கிழமை தொடங்கியது.

4.ஊரடங்கு - முதலமைச்சர் நாளை ஆலோசனை

கரோனா பரவல் காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் மருத்துவ வல்லுநர்கள், சுகாதார துறை அதிகாரிகள் உள்ளிட்டோருடன் முதலமைச்சர் ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்துகிறார்.

5. சென்னையில் 14 கரோனா சிகிச்சை மையங்கள் தற்காலிகமாக மூடல்

சென்னையில் அமைக்கப்பட்ட 32 கரோனா சிறப்பு சிகிச்சை மையங்களில் (Covid care centre) 14 சிகிச்சை மையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன.

6.திமுக வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் பேரவையில் முதலமைச்சர் உறுதி!

திமுகவின் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

7.வியாபாரி கொலை வழக்கு: காவலரிடம் தொடர் விசாரணை!

சேலம் வியாபாரி முருகேசன் கொலை வழக்கில் கைதான காவலரிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.

8.ஆசை வார்த்தை கூறி சிறுமியை திருமணம் செய்த இளைஞர் கைது!

திருச்சி: ஆசை வார்த்தை கூறி 16 வயது சிறுமியை திருமணம் செய்த இளைஞரை போக்சோவில் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

9.150 ஏக்கர் அரசு நிலம் ஆக்கிரமிப்பு: அறிக்கை தாக்கல் செய்ய ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

செம்பியம் பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள 150 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய, சென்னை மாவட்ட ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

10. யூ டியூப் தளத்திலிருந்து நீக்கப்பட்டதற்கு விருது: வித்தியாசமான சாதனையை படைத்துள்ள ’தப்பட்’ திரைப்படம்!

யூ டியூப் தளத்தில் அதிக முறை புகார் அளிக்கப்பட்டு நீக்கப்பட்டதற்காக ’தப்பட்’ திரைப்படம் ’கேன்ஸ் லயன்ஸ் சில்வர்’ விருதை வென்றுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details