தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 News @ 9 pm - ஈடிவி செய்திகள்

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம்.

9 மணி செய்திச் சுருக்கம்  Top 10 News @ 9 pm
9 மணி செய்திச் சுருக்கம் Top 10 News @ 9 pm

By

Published : Jun 19, 2021, 9:21 PM IST

ஊரடங்கு வாபஸ்: தெலங்கானா அரசு அறிவிப்பு

கரோனா பரவல் காரணமாக தெலங்கானா மாநிலத்தில் விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு முழுவதும் நீக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

கரோனா நிதி : முதலமைச்சரிடம் ரூ. 2 கோடி வழங்கிய லைகா நிறுவனம்

முதலமைச்சர் ஸ்டாலினிடம் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் லைகா சார்பில் கரோனா நிதியாக ரூ. 2 கோடி வழங்கப்பட்டது.

பொதுமக்கள் கடைபிடிக்கவேண்டிய கரோனா தடுப்பு நெறிமுறை குறித்த காணொலி

சென்னை: ஊரடங்கு தளர்வின்போது பொதுமக்கள் கடைபிடிக்கவேண்டிய கரோனா தடுப்பு நெறிமுறைகள் குறித்து பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை இயக்குநர் செல்வ விநாயகம் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

'ஆற்றில் ஜாலியாக விளையாடும் குட்டி யானை' - க்யூட் வீடியோ

தனது குழந்தை ஆற்றில் இறங்கி விளையாட ஆசைப்படுகிறது என்பதை அறிந்த தாய் யானை அதைப் பாதுகாப்பாக மற்றொரு பெண் யானையின் துணையுடன் ஆற்றில் அழைத்துச் செல்கிறது. அப்போது தாயும் கன்றும் பேசிக்கொள்ளும் அழகான சத்தங்கள் கேட்க கேட்க இனிக்கிறது. இந்தக் காணொலியை வனத் துறை அலுவலர் சுதா ராமன் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

மன்னார்குடியில் எடியூரப்பாவின் உருவபொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம்

திருவாரூர்: மன்னார்குடியில் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவைக் கண்டித்து அவரது உருவ பொம்மையை எரித்து விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை நாகராட்சியில் மாதம்தோறும் ஒரு வார காலத்திற்கு தீவிர தூய்மைப்பணி திட்டம்

சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் உள்ள 614 இடங்களில் ஒரு வார காலத்திற்கு தீவிர தூய்மைப் பணி நடைபெறவுள்ளது.

கரோனாவால் சிங்கங்கள் பாதிப்பு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் தீவிர கண்காணிப்பு

வண்டலூர் உயிரியல் பூங்காவில் கரோனா தொற்றால் சிங்கங்கள் உயிரிழந்ததை தொடர்ந்து, சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள புலி,சிறுத்தை, யானைகளை கண்காணிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

WTC FINAL 21: வெளிச்சமின்மை காரணமாக 2வது முறையாக போட்டி நிறுத்தம்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. கேப்டன் கோலியின் நிதான ஆட்டத்தால், தற்போது இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்களை எடுத்துள்ளது.

திணறும் இந்தியா - ஆதிக்கம் செலுத்தும் நியூசிலாந்து WTC21

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், இந்திய அணி இன்றைய ஆட்டத்தின் மதிய உணவு இடைவேளைக்கு முன்பு வரை, 2 விக்கெட்டுகள் இழந்து 69 ரன்களை எடுத்துள்ளது.

கரூரில் கரோனா: குறையும் பாதிப்பு, அதிகரிக்கும் உயிரிழப்பு

கரூர் மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்பு குறைந்து வரும் நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details