தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இரவு 9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9 PM - latest news

ஈடிவி பாரத்தின் இரவு 9 மணி செய்திச் சுருக்கம் இதோ..

இரவு 9 மணி செய்திச் சுருக்கம்
இரவு 9 மணி செய்திச் சுருக்கம்

By

Published : Jun 18, 2021, 9:09 PM IST

மேகதாது அணை கட்டப்படும்- எடியூரப்பா திட்டவட்டம்!

மத்திய அரசின் அனுமதிபெற்று மேகதாது பகுதியில் அணை கட்டப்படும் என்று கர்நாடக முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

புனேவிலிருந்து சென்னை வந்தடைந்த 4.80 லட்சம் கோவீஷீல்ட் தடுப்பூசிகள்!

புனேவிலிருந்து நான்கு லட்சத்து 80 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தன.

தடுப்பூசியில் எதிர்க்கட்சிகள் அரசியல்!

நாட்டு மக்களுக்கு கோவிட் தடுப்பூசி வழங்குவதில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன. இதனை மக்கள் அறியும்படி அம்பலப்படுத்த வேண்டும் என ஜெபி நட்டா கேட்டுக்கொண்டார்

தங்கச்சிமடம் அருகே பற்றி எரிந்த குடிசை வீடு!

ராமநாதபுரம்: தங்கச்சிமடம் அருகே குடிசை வீடு ஒன்று பற்றி எரிந்தது. நல்வாய்ப்பாக பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

'பொது தேர்தல்கள் - 2019' பற்றிய வரைப்பட தொகுப்பு - இந்திய தேர்தல் ஆணையம் வெளியீடு!

பொது தேர்தல்கள்-2019 பற்றிய வரைப்பட தொகுப்பை( Atlas) இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

கடன் கொடுக்கல் வாங்கல் விவகாரம்: 3 பேருக்கு அரிவாள் வெட்டு

விருதுநகர்: அண்ணா நகரில் கடன் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட மோதலில் ஒரு தரப்பை சேரந்த மூன்று பேருக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்டதையடுத்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.

ஆற்றில் குளிக்கச் சென்ற ஆறு வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

விருதுநகர்: சாத்தூர் வைப்பாற்றில் குளிக்கச் சென்ற ஆறு வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

தன்னை புகழ்ந்து வீடியோ வெளியிட்டால் பணம் - பப்ஜி மதன் வாக்குமூலம்

சென்னை: தன்னை புகழ்ந்து வீடியோ பதிவிட்டால் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரை வழங்கியதாக கைது செய்யப்பட்ட மதனிடம் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்தது.

சமரசம் அடையும் வடிவேலு: மீண்டும் தொடங்கும் 'இம்சை அரசன் 24-ம் புலிகேசி'

சென்னை: 'இம்சை அரசன் 24-ம் புலிகேசி' தொடர்பான விவகாரத்தில் ஷங்கர் - வடிவேலு இருவருக்கும் இடையே சமரசப் பேச்சுவார்த்தை சுமூகமாக முடிவடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

WTC FINAL: அஸ்வினின் மனைவி வெளியிட்ட மேட்ச் அப்டேட்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெறும் சவுத்தாம்ப்டனில் மழை நின்றுவிட்டதாக இந்திய வீரர் அஸ்வினின் மனைவி தகவல் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details