தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9 PM - tamilnadu latest news

ஈடிவி பாரத்தின் இரவு 9 மணி செய்திச் சுருக்கம்.

top 10 news at 9 pm
9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9 PM

By

Published : Mar 22, 2021, 10:01 PM IST

ஐநா மன்றத்தில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க மா.கம்யூ. வலியுறுத்தல்

ஐநா மனித உரிமை மன்றத்தில் இலங்கை அரசுக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

கரோனா: தமிழ்நாட்டில் கல்லூரிகளுக்கு விடுமுறை

தமிழ்நாட்டில் அனைத்துக் கல்லூரிகளுக்கும் கரோனா பரவல் காரணமாக நேரடி வகுப்புகள் ரத்துசெய்யப்பட்டுள்ளன.

'இரட்டை இலைக்கு வாக்களிக்கவில்லையெனில் உங்களுக்கு நல்ல சாவே வராது!'

இரட்டை இலைக்கு வாக்களிக்கவில்லையென்றால் உங்களுக்கு நல்ல சாவே வராது, நன்றிகெட்ட தொகுதி என்ற பெயரை எடுத்துவிட வேண்டாம் என நாமக்கல் அதிமுக எம்எல்ஏ சர்ச்சையாகப் பேசியுள்ளார்.

தமிழகத்தில் உயா்கல்வி படித்தோர் 49% போ்! - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் 49 சதவீதம் போ் உயா்கல்வி படித்துள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தோ்தல் பிரச்சாரத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் புதிகாக 1,385 பேருக்கு கரோனா பாதிப்பு!

தமிழ்நாட்டில் இன்று (மார்ச் 22) மேலும் 1,385 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதாக மக்கள் நல்வாழ்வு துறை அறிவித்துள்ளது.

மது அருந்துவதற்கான வயது வரம்பை குறைத்த டெல்லி!

மது அருந்துவதற்கான வயது வரம்பை 25 லிருந்து 21ஆக ஆம் ஆத்மி அரசு குறைத்துள்ளது.

குஜராத் காவல் நிலையம் அருகே 4 வயது குழந்தையின் எலும்புக்கூடு

குஜராத் காவல் நிலைய வளாகத்தில் 4 வயதிற்குப்பட்ட குழந்தையின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுதியது.

கூகுள் மேப்பில் டார்க் மோட் வசதி அறிமுகம்!

சான் பிரான்சிஸ்கோ: கூகுள் மேப் செயலியின் அடுத்த வெர்ஷனில் புதிதாக டார்க் மோட் வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது.

விஷ்ணு விஷால் - ஜுவாலா கட்டா விரைவில் திருமணம்!

பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவை விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போவதாக நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.

சிவகார்த்திகேயனின் 'டான்' 2ஆம் கட்ட படப்பிடிப்பு நாளை தொடக்கம்!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் 'டான்' திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நாளை (மார்ச் 22) சென்னையில் தொடங்குகிறது.

ABOUT THE AUTHOR

...view details