தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

9 மணி செய்திகள் Top 10 news @ 9 PM - tamilnadu latest news

ஈடிவி பாரத்தின் இரவு 9 மணி செய்திச் சுருக்கம்.

9 மணி செய்திகள்
9 மணி செய்திகள்

By

Published : Feb 27, 2021, 9:10 PM IST

1 'இட ஒதுக்கீடு கொடுத்ததால், குறைந்த தொகுதிகளைப் பெற்றுள்ளோம்' அன்புமணி

எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக 23 இடங்களில் போட்டியிடும் என, அதிமுக தலைமை அறிவித்துள்ளது. நேற்று(பிப்.26) சட்டப்பேரவையில் வன்னியர் இட ஒதுக்கீட்டுக்கான மசோதா தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று(பிப்.27) அதிமுக- பாமக இடையேயான தொகுதி ஒதுக்கீடு உறுதிசெய்யப்பட்டது. மேலும், எந்தெந்த தொகுதிகளில் பாமக போட்டியிடும் என்பது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் என அதிமுக தெரிவித்துள்ளது.

2 ‘சிலரது திருட்டு புத்தி காரணமாக இயற்கை வளம் பாதிக்கப்படுகிறது’ நீதிபதி கிருபாகரன்!

திருப்பூர்: தமிழ்நாட்டில் அலுவலர்கள் சிலரின் திருட்டு புத்தி காரணமாக, இயற்கை வளம் பாதிக்கப்படுவதாக சூழலியல் அறிக்கை வெளியீட்டு விழாவில் உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் விமர்சித்துள்ளார்.

3 சிறுவன் பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்த வழக்கில் குற்றவாளி தரப்பில் பதிலளிக்க உத்தரவு!

மதுரை: சிறுவன் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவது குறித்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் காவல் ஆய்வாளர் தாக்கல் செய்த மனுவுக்கு, குற்றவாளி தரப்பில் பதிலளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

4 மதுரை டூ சென்னை: 50 நிமிடத்தில் பெண்ணிற்கு இருதய மாற்று அறுவை சிகிச்சை!

சென்னை: விபத்தில் மூளைச்சாவு அடைந்த மதுரை இளைஞரின் இருதயம் குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இருதய கோளறு காரணமாக சிகிச்சை பெற்று வந்த பெண்ணிற்கு இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

5 திருநெல்வேலியில் 316 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை- ஆட்சியர் விஷ்ணு பேட்டி

திருநெல்வேலி: சட்டப்பேரவை தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஆட்சியர் விஷ்ணு திருநெல்வேலி மாவட்டத்தில் 316 வாக்குச்ச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

6 தமிழ்நாடு தேர்தலில் தோல்வியடைந்த பிரபலங்கள்

தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முன்னாள் முதலமைச்சர்கள் உள்ளிட்ட விஜபி வேட்பாளர்கள் போட்டியிட்ட தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை இழந்தனர்.

7 கோயிலை நிர்வகிக்கும் பொறுப்பை பக்தர்களுக்கே கொடுத்துவிடுங்கள் - சந்தானம் ட்வீட்

கோயில்களைப் பக்தர்களிடம் தமிழ்நாடு அரசு கொடுக்க வேண்டுமென ஈஷா யோகா அறக்கட்டளையின் நிறுவனர் சத்குரு கூறிய கருத்து சரியானது என, சந்தானம் தெரிவித்துள்ளார்.

8 டி20 கிரிக்கெட்டில் மீண்டும் மிரட்ட வரும் ‘யுனிவர்ஸ் பாஸ்’ - உற்சாகத்தில் ரசிகர்கள்

டி20 கிரிக்கெட்டிற்கு பெயர்போன அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல், இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

9 ராஜேஸ் தாஸை பணியிடை நீக்கம் செய்ய மாதர் சங்கம் கோரிக்கை

சென்னை: பெண் ஐபிஎஸ் அலுவலருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படும் விவகாரத்தில், சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

10 கடையில் பூட்டை உடைத்த திருடன்- 4 மணி நேரத்தில் கைது!

பெரம்பலூர்: நான்கு ரோடு அருகே எலக்ட்ரிக் கடையில் பூட்டை உடைத்து திருடியவரை நான்கு மணிநேரத்தில் காவல்துறையினர் கைது செய்தனர்.

ABOUT THE AUTHOR

...view details