தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9 PM - ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம்.

Top 10 news @ 9 pm
Top 10 news @ Top 10 news @ 9 pm9 pm

By

Published : Sep 29, 2020, 9:11 PM IST

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் நாளை தீர்ப்பு; உஷார் நிலையில் லக்னோ

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் நாளை தீர்ப்பு வரவுள்ள நிலையில் நீதிமன்றம் அமைந்துள்ள லக்னோவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

திமுக தொண்டரை திட்டிய ஆ.ராசா!

வேளாண் சட்டத்தை எதிர்த்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக தொண்டரை ஆ.ராசா திட்டியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

'ஆளுநர் நடவடிக்கை எடுக்காவிட்டால் சட்டரீதியாக நடவடிக்கை எடுப்போம்'

அண்ணா பல்கலைக்கழகத்தை பிரிக்கும் சட்டத்திருத்த மசோதாவை திருப்பியனுப்ப வேண்டுமென அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வலியுறுத்திள்ளது.

கோவையில் 31 ஆயிரத்தை தாண்டியது கரோனா பாதிப்பு

கோவை மாவட்டத்தில் இன்று (செப்.29) ஒரே நாளில் புதிதாக 572 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் புதிய சரக்கு சேமிப்பு கிடங்கை நிறுவிய அமேசான்..!

தங்களது வணிகத்தை மேலும் விரிவுபடுத்தும் வகையில் பிரபல இணைய வர்த்தக நிறுவனமான அமேசான் புதிய சரக்கு சேமிப்பு கிடங்கை தமிழ்நாட்டில் நிறுவியுள்ளது.

பாஜக பொதுச்செயலாளர் கே.டி.ராகவனுக்கு கரோனா!

பாஜக மாநில பொதுச்செயலாளர் கே.டி.ராகவனுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

திருப்போரூர் கோயில் சொத்துகளை அளவீடு செய்து அறிக்கை அளிக்க உத்தரவிட்ட நீதிமன்றம்!

திருப்போரூர் கந்தசாமி முருகன் கோயில், ஆளவந்தார் அறக்கட்டளைக்குச் சொந்தமான சொத்துகளை அளவீடு செய்து அறிக்கை தாக்கல் செய்ய, தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாலியல் தொழிலாளிகளுக்கு ரேஷன் பொருள்கள் வழங்க உச்ச நீதிமன்றம் மாநிலங்களுக்கு வலியுறுத்தல்...!

அடையாள அட்டை ஏதும் இல்லாமல் பாலியல் தொழிலாளிகளுக்கு ரேஷன் பொருள்கள் வழங்க மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

பட்டாசு விபத்து நிகழ்ந்த பகுதியில் முதலமைச்சர் நாராயணசாமி ஆய்வு!

அரியாங்குப்பம் அருகே பட்டாசு விபத்து நிகழ்ந்த பகுதியை முதலமைச்சர் நாராயணசாமி நேரில் சென்று ஆய்வு செய்தார்.

ஐபிஎல் 2020: டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சு!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details