தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9PM - ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம்.

Top 10 news @ 9 pm
Top 10 news @ 9 pm

By

Published : Sep 25, 2020, 9:31 PM IST

  • எஸ்.பி.பி. உடலை முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய வேண்டும் - முதலமைச்சருக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்..!

பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உடலை முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய வேண்டும் என திமுக தலைவர் முக ஸ்டாலின் முதலமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளார்.

  • கந்தர்வக்குரலோன் எஸ்பிபிக்கு கடற்கரை மணலில் சிற்பாஞ்சலி செலுத்திய சுதர்ஸன் பட்நாயக் !

புவனேஷ்வர் : மறைந்த திரையிசைப் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் உருவத்தை பூரி கடற்கரை மணலில் பதித்து சிற்பி சுதர்சன் பட்நாயக் சிற்பாஞ்சலி செலுத்தினார்.

  • சாகாவரம் பெற்ற பாடல்களை பாடியவர் எஸ்பிபி - செல்லூர் ராஜூ இரங்கல்

திண்டுக்கல்: சாகாவரம் பெற்ற பாடல்களை பாடியுள்ள எஸ்பிபியின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பாகும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

  • எஸ்பிபியின் உடல் நல்லடக்கம் செய்யவுள்ள இடத்தில் பணிகள் மும்முரம்!

திருவள்ளூர்: மறைந்த எஸ்பிபியின் உடல் நல்லடக்கம் செய்யவுள்ள இடத்தில் ஜேசிபி வாகனங்கள் கொண்டு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

  • காங்கிரஸ் கட்சிக்கூட்டத்தில் எஸ்.பி.பிக்கு மவுன அஞ்சலி!

சென்னை: சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி மாவட்ட பொறுப்பாளர்களுக்கான கூட்டத்தில் பாடகர் எஸ்.பி.பி.க்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

  • இனி இறைவன் சபையில் கலைஞன் நீ...! - நடிகர் மயில்சாமி இரங்கல்

எஸ்பிபியின் மறைவால் மிகுந்த வருத்தத்தில் இருக்கிறேன், என் துயரத்தை சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை என்று நடிகர் மயில்சாமி தெரிவித்தார்.

  • "ஆரோக்கிய சேது செயலியின் பதிவிறக்கம் 90 விழுக்காடு குறைந்துள்ளது"

டெல்லி: கரோனா பாதிப்பு உள்ளவர்களை கண்டறியும் மத்திய அரசு வெளியிட்ட ஆரோக்கியா சேது செயலியின் பதிவிறக்கம் ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் 90 விழுக்காடு குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

  • பிகார் சட்டப்பேரவைத் தேர்தல்: மூன்று கட்டங்களாக அக்.28 முதல் நவ.7 வரை நடக்கும்!

பிகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் மூன்று கட்டங்களாக அக்.28ஆம் தேதி தொடங்கி நவ.7ஆம் தேதி வரை நடக்கும் என தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.

  • ஐபிஎல் 2020: சென்னை அணிக்கு 176 ரன்கள் இலக்கு!

சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி மூன்று விக்கெட் இழப்பிற்கு 175 ரன்களை எடுத்தது.

  • ’மீண்டும்‌ உங்களை இந்த மண்ணில்‌ வரவேற்க காத்திருக்கிறேன்’- சிம்பு உருக்கம்!

மீண்டும்‌ உங்களை இந்த மண்ணில்‌ வரவேற்க காத்திருக்கிறேன் என்று பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மறைவு குறித்து நடிகர் சிம்பு உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details