தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9 PM - செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம்.

top-10-news-at-9-pm
top-10-news-at-9-pm

By

Published : Sep 17, 2020, 9:47 PM IST

  • மோடி அமைச்சரவையிலிருந்து விலகிய பெண் அமைச்சர்: காரணம் என்ன?

டெல்லி: விவசாயிகள் மசோதா 2020க்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வண்ணம் மத்திய அமைச்சர் பதவியை ஹர்சிம்ரத் கெளர் பாதல் ராஜினாமா செய்தார்.

  • நெருங்கும் பிகார் தேர்தல் - அனல் பறக்கும் களம்!

பாட்னா: பிகாரில் உள்ள அரசியல் கட்சிகள் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முழு வீச்சில் தயாராகி வருகின்ற நிலையில், கரோனா பரவலின் மத்தியிலும் தேர்தல் உற்சாகம் அம்மாநிலத்தில் அதிகரித்துள்ளது.

  • சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்ற அதிமுக எம்எல்ஏ லோகநாதனுக்கு கரோனா

முதல் நாள் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கலந்துகொண்ட கே.வி.குப்பம் தொகுதி அதிமுக எம்எல்ஏ லோகநாதனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

  • நன்றி ரஜினிகாந்த்! - பிரதமர் மோடி ட்வீட்

பிறந்தநாள் வாழ்த்துகள் கூறிய ரஜினி காந்திற்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

  • இந்தியாவின் மிக சக்திவாய்ந்த லோகோமோட்டிவ் WAG-12 ரயில் எஞ்சின் ஹிசருக்கு வந்தது!

WAG-12 எஞ்சினானது 150 பெட்டிகளுடன் ஒரு ரயிலை இழுக்கும் திறன் கொண்டது. இது சரக்கு ரயில்களின் வேகத்தை அதிகரிப்பது மட்டுமில்லாமல், பாதுகாப்பான, கனமான சரக்கு ரயில்களை நாடு முழுவதும் இழுத்து செல்ல உதவியாக இருக்கும்.

  • 'ஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக மாற்ற எந்த தடையும் ஏற்படாது' - அமைச்சர் கடம்பூர் ராஜு

தூத்துக்குடி: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை நினைவு இல்லமாக மாற்றுவதில் எந்த தடையும் ஏற்படாது என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

  • சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் அக்ஷய் குமார் திரைப்படம்!

அக்ஷய் குமார் நடிப்பில் வெளியான பேட்மேன் திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ளது

  • கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு!

திருவள்ளூர்: நாட்டறம்பள்ளி அருகே கிணற்றில் தவறி விழுந்து ஐந்து வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • நம்பகமான தடுப்பூசிக்கான தேடலில் உலகம்

மூன்றாம் கட்ட சோதனை வெற்றிகரமாக முடிந்ததும், தடுப்பூசியை பொது பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான செயல்முறையை முடிக்க 12-18 மாதங்கள் ஆகும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த ஆண்டு முடிவில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்கும் என்ற ஆஸ்ட்ரோஜீனின் சமீபத்திய உத்தரவாதம், ஆபத்தான அவசரத்தை காட்டுகிறது.

  • ஐபிஎல் 2020: பலமும்...! பலவீனமும்...! ராஜஸ்தான் ராயல்ஸ்

ஐபிஎல் தொடரின் முதல் சீசனிலேயே கோப்பையை கைப்பற்றிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு, ஸ்மித், ஸ்டோக்ஸ், மில்லர், பட்லர் உள்ளிட்ட அதிரடி வீரர்கள் அடுத்த கோப்பையைக் வென்றெடுக்க காத்திருக்கின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details