தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9 PM - சர்வதேசம்

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம் இதோ...

chennai
chennai

By

Published : Jun 19, 2020, 8:59 PM IST

கரோனா பாதிப்பு: தமிழ்நாட்டில் இன்று (ஜூன் 19) ஒரே நாளில் 2115 பேருக்கு தொற்று

சென்னை: தமிழ்நாட்டில் இன்று (ஜூன் 19) ஒரே நாளில் 2115 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம், பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 54 ஆயிரத்து 449ஆக உயர்ந்துள்ளது.

கரோனா தொற்று தீவிரம்: அதிகரிக்கும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை

சென்னை: கரோனா தொற்று பாதிப்பு காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் கூறியுள்ளது.

ராகுல் காந்தி பிறந்த நாள் - 1500 விவசாயிகளுக்கு விதை நெல் வழங்கும் விழா!

திருவண்ணாமலை: மேல்செங்கம் பகுதியில் ராகுல் காந்தியின் 50ஆவது பிறந்த தினமான இன்று (ஜூன் 19) விவசாயிகள் பாதுகாப்பு தினமாக கொண்டாடப்பட்டது. இதில் விவசாயிகள் 1500 நபருக்கு விதை நெல் வழங்கப்பட்டது.

மதுரை காமராசர் பல்கலைக்கழக புதிய பதிவாளர் - பேராசிரியர் வசந்தா பொறுப்பேற்பு

மதுரை: காமராசர் பல்கலைக்கழக புதிய பதிவாளராக பேராசிரியர் வசந்தா பொறுப்பேற்றுக்கொண்டார்.

கரோனா எதிரொலி சரிந்த சீன பொருளாதாரம்!

கரோனா தாக்கத்தால் இந்த ஆண்டில் சீனாவுக்கான உலகளாவிய பொருள்கள் ஏற்றுமதி 15.5 பில்லியன் டாலர்கள் குறைந்து 33.1 பில்லியன் டாலர்களாக வீழ்ச்சியடையக் கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 46 விழுக்காடு வீழ்ச்சி ஆகும்.

மருத்துவப் பரிசோதனையில் இருக்கும் டிஜேஎம்2 ஆண்டிபாடி!

டி.ஜே.எம் 2 என்பது மனித ஜி.எம்-சி.எஸ்.எஃப்-க்கு எதிராக உள்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டிபாடி ஆகும். இது மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்திக்கு ஊட்டம் அளிக்கும். நோய்க் கிருமித் தாக்குதல்களை எதிர்த்து போராடும் என்று கூறப்படுகிறது.

இங்கிலாந்தில் கரோனாவால் அதிக மக்கள் உயிரிழக்கக் காரணம் என்ன?

லண்டன் : வயது, பாலினம், உடல் பருமன், நோய் பாதிப்பு ஆகியவையும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழப்பதற்கு காரணிகளாக அமைந்துள்ளதாக இங்கிலாந்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

17வது ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் ஜெயம் ரவி!

நடிகர் ஜெயம் ரவி திரைத்துறையில் நுழைந்து இன்றோடு 17 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

’சாப்பாட்டில் இஞ்சி, மிளகு, சுக்கு சேத்துக்கோங்க’ - எஸ்.வி.சேகர் வெளியிட்ட கரோனா விழிப்புணர்வு வீடியோ!

ஊரடங்கு உத்தரவை கடைப்பிடிக்கவில்லை என்றால் தொற்று அதிகம் பரவ அதிக வாய்ப்புள்ளது என நடிகர் எஸ்.வி.சேகர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

மாவட்ட அளவிலான கெலோ இந்தியா மையங்களை நிறுவ விளையாட்டு அமைச்சகம் முடிவு!

விளையாட்டு வீரர்களுக்கு அடிமட்ட அளவிலான பயிற்சிகளை மேம்படுத்தவும், முன்னாள் சாம்பியன் வீரர்களுக்கு நிலையான வருமான ஆதாரத்தை உருவாக்கவும், நாடு முழுவதும் மாவட்ட அளவில் 1000 கெலோ இந்தியா மையங்களை (கேஐசி) நிறுவ விளையாட்டு அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details