தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காலை 9 மணி செய்தி சுருக்கம் TOP 10 NEWS @ 9 AM - 9 மணி செய்தி சுருக்கம்

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்தி சுருக்கம்

top-10-news-at-9-am
top-10-news-at-9-am

By

Published : Nov 8, 2021, 9:18 AM IST

1. சாலையில் உள்ள பள்ளங்கள் சுற்றி தடுப்பு வேலிகள் அமைக்க வேண்டும் - முதலமைச்சர் உத்தரவு

சாலைகளில் தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகள் சார்பில் தோண்டப்பட்டுள்ள பள்ளங்களைச் சுற்றித் தடுப்பு வேலிகள் அமைக்க வேண்டும் எனத் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாகச் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

2. 14 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்...

தமிழ்நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக 14 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்டும், ஏழு மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்டும் விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

3. தொடர் மழை: பள்ளி கல்லூரிகளுக்கு இரண்டு நாட்களுக்கு விடுமுறை

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாகத் தமிழ்நாட்டில் 21 மாவட்டங்களுக்குப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 12 மாவட்டங்களுக்குக் கல்லூரிகளுக்கும் விடுமுறை விடுமுறை அளித்து சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

4. அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை

சென்னையில் அத்தியாவசியத் துறைகள் தவிர மற்ற அரசு அலுவலகங்களுக்கு (நவம்பர் 8) விடுமுறை எனத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

5. சாலையில் செல்லும் போது திடீரென தீப்பிடித்து எரிந்த கார்..

தாம்புரம் அருகே ஜிஎஸ்டி சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்ததில், கார் முழுவதும் எரிந்து நாசமானது.
6. பணமோசடி வழக்கு: அனில் தேஷ்முக்கை அமலாக்கத்துறை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி!

சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட மகாராஷ்டிரா முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக்கை நவம்பர் 12ஆம் தேதிவரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு மும்பை உயர் நீதிமன்றம் நேற்று (நவ. 7) அனுமதியளித்துள்ளது.

7. புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை - அமைச்சர் நமச்சிவாயம்

புதுச்சேரியில் நவ.08 மற்றும் 09ஆம் தேதி ஆகிய இரு தினங்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

8. நாள் முழுவதும் மழைப்பாதிப்புகள் பற்றிய ஆய்வு - மு.க.ஸ்டாலின்

சென்னையில் கனமழையால் பாதிக்கப்பட்டப் பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
9. தெகிடி நாயகனுக்கு பிறந்தநாள்!

நடிகர் அசோக் செல்வன் இன்று தனது பிறந்தநாளை இன்று கொண்டாடி வரும் நிலையில் இவரது ரசிகர்களும்,திரைப்பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

10. பொதுமக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் பணிகள் தீவிரம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில், பொதுமக்களுக்கு நிவாரணப்பொருட்களை வழங்கினார்

ABOUT THE AUTHOR

...view details