தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காலை 9 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS @ 9 AM

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்தி சுருக்கத்தைக் காணலாம்.

TOP 10 NEWS @ 9 AM
TOP 10 NEWS @ 9 AM

By

Published : Oct 12, 2021, 9:16 AM IST

1. ரூ.12,000 கோடியைச் சீரழித்த பான் பராக் கறைகள் இனி உதவட்டும் சுற்றுச்சூழலுக்கு...!

ரயில்களில் உள்ள பான் பராக் கறைகள், எச்சில் கறைகள் போன்றவற்றைச் சுத்தப்படுத்த ஏறத்தாழ 12 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

2. உள்ளாட்சித் தேர்தல்: தொடங்கியது வாக்கு எண்ணிக்கை

ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்றுவருகிறது.

3. 'வருமுன் காப்போம்' திட்டம்: இன்று 1,250 மருத்துவ முகாம்கள்

தமிழ்நாடு முழுவதும் இன்று கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் மூலம் ஆயிரத்து 250 மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளன என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

4. ரயில் பயணிகள் கவனத்திற்கு: வைகை, பல்லவன் ரத்து!

ரயில் பாதையில் மேற்கொள்ளப்படும் பராமரிப்புப் பணிகள் காரணமாக வைகை, பல்லவன் ரயில்கள் அக்டோபர் 20, 27ஆம் தேதிகளில் ரத்துசெய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

5. கரோனா தடுப்பூசி சிறப்புப் பரிசு - மூவருக்கு குலுக்கல் முறையில் 32" எல்இடி டிவி

திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் நடந்த ஐந்தாவது மெகா தடுப்பூசி முகாமில் கலந்துகொண்டவர்களில் மூன்று நபர்களுக்கு குலுக்கல் முறையில் 32 இன்ச் எல்இடி டிவி வழங்கப்பட்டது.

6. கணவன் படுகொலை: மனைவி கைது!

புள்ளகவுண்டம்பட்டியைச் சேர்ந்த தயானந்தன் என்பவர் படுகொலைசெய்யப்பட்ட வழக்கில், சந்தேகத்தின்பேரில் அவரது மனைவி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

7. ஜம்மு காஷ்மீர் என்கவுன்ட்டர்: வீழ்த்தப்பட்ட 3 பயங்கரவாதிகள்

ஜம்மு காஷ்மீர் ஷோபியன் பகுதியில் பயங்கரவாத குழுவினருக்கும், பாதுகாப்புப் படையினருக்கு இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில், மூன்று பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.

8. ஆதிக்கசாதி மாணவியைக் காதலித்த இளைஞர் ஆணவப்படுகொலை

தஞ்சாவூரில் மாணவி ஒருவரை காதலித்த காரணத்திற்காக, பட்டியலின சமூகத்தைச் சார்ந்த இளைஞர் ஆணவப்படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

9. HBD அக்ஷரா ஹாசன் - தல படத்தின் 'விவேகம்'... கமலின் 'விஸ்வரூபம் 2'

உலக நாயகன் கமல் ஹாசனின் இரண்டாவது மகளும் நடிகையுமான அக்ஷரா ஹாசன் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடிவருகிறார்.

10. HBD சினேகா - புன்னகை அரசிக்குப் பிறந்தநாள்

புன்னகை அரசி சினேகா இன்று தனது 40ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிவரும் நிலையில் திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details