தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காலை 9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9AM - காலை 9 மணி செய்தி

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திச்சுருக்கம்

9AM
9AM

By

Published : Jul 20, 2021, 9:07 AM IST

Updated : Jul 20, 2021, 11:04 AM IST

1. வீடுகளுக்கு சென்று சிகிச்சையளிக்கும் திட்டம் தொடக்கம்

கிராமப்புறங்களில் நோய்வாய்ப்பட்டு வீட்டிலேயே படுத்த படுக்கையாக உள்ள நோயாளிகளுக்கு வீட்டிற்கு சென்று நேரடியாக சிகிச்சை அளிக்கும் வாகன வசதியை அமைச்சர் சா.மு. நாசர் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

2. வழக்கறிஞர் கொலை வழக்கு - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் கைது

திருவள்ளூரில் வழக்கறிஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

3. குளம் ஆக்கிரமிப்பு - மீட்க கோரிக்கை

நன்னிலம் அருகே ஆக்கிரமிக்கப்பட்டுள்ள குளத்தை மீட்டு தரவேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

4. நாடாளுமன்றத்தை மிரட்டும் பெகாசஸ் அரக்கன்!

17ஆவது மக்களவையின் 6ஆவது அமர்வு மழைக்கால கூட்டத்தொடர் திங்கள்கிழமை (ஜூலை 19) தொடங்கிய நிலையில், இஸ்ரேலின் பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரம் வெளியானது. இது குறித்து ஈடிவி பாரத்தின் துணை செய்தி ஆசிரியர் கிருஷ்ணானந்த் திரிபாதி விவரிக்கிறார்.

5. இத்தனை ஆபத்தானதா இஸ்ரேலின் பெகாசஸ்!

இஸ்ரேலிய உளவு மென்பொருளான பெகாசஸை ஒரு முறை கணினியிலோ அல்லது ஸ்மார்ட்போனிலோ நிறுவினால் அதை நீக்குவது அவ்வளவு சுலபமல்ல என்கிறார் மூத்த செய்தியாளர் சஜ்ஜிப் கேஆர் பரூவா.

6. கல்லூரி மாணவர்களுக்கு கரோனா தடுப்பூசி

புதுச்சேரியில் கல்லூரி மாணவர்களுக்கான கரோனா தடுப்பூசி முகாமை அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், நமச்சிவாயம் தொடங்கி வைத்தனர்.

7. ஸ்டெர்லைட் ஆக்சிஜன் உற்பத்தியை மேலும் நீடிக்க முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என, முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

8. அக்கா என கூப்பிடலாம்: ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

புதுச்சேரி: என்னை அக்காவென கூப்பிடலாம் என்று புதுச்சேரி மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.

9. ஆபாச படம் பதிவேற்றம்: ராஜ் குந்த்ரா கைது

மும்பை: ஆபாச படங்களை பதிவேற்றம் செய்த விவகாரத்தில் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டார்.

10. எஸ்.ஜே.சூர்யா- கோலிவுட்டிற்குக் கிடைத்த நியூ ஸ்டைல்

நடிகர் எஸ்.ஜே.சூர்யா இன்று (ஜூலை 20) தனது 53ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Last Updated : Jul 20, 2021, 11:04 AM IST

ABOUT THE AUTHOR

...view details