தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS @ 9AM - ஈடிவி பாரத் செய்திகள்

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம்...

9AM
9AM

By

Published : Jun 14, 2021, 9:01 AM IST

1.இன்று கூடுகிறது அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்: சசிகலாவின் அரசியல் தலையீடுகளுக்கு முடிவு?

அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் இன்று கூடுகிறது. மீண்டும் அரசியலுக்கு வருவேன் என சசிகலா பேசி வருவதால் இந்த கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.

2.கரோனா சிகிச்சை மையத்தை திறந்து வைத்த தா.மோ. அன்பரசன்

செங்கல்பட்டு: திருப்போரூர் அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சை மையத்தை அமைச்சர் தா.மோ. அன்பரசன் திறந்துவைத்தார்.

3.பதினோராம் வகுப்பு மாணவர் சேர்க்கையை ஒத்திவைக்க ஆசிரியர்கள் கோரிக்கை

பள்ளிகளில் பதினோராம் வகுப்பில் மாணவர் சேர்க்கை கரோனா தொற்று குறைந்த பின்னர் தொடக்க வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

4.ஆழம் பார்க்கும் சசிகலா - பதற்றத்தில் அதிமுக தலைவர்கள்!

அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற உள்ள நிலையில் சசிகலா தொடர்ந்து ஆடியோ வெளியிட்டு வருவது அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை உண்டாகி உள்ளது.

5.குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்: அமைச்சர் கே.என்.நேருவுக்கு வைகோ கடிதம்

சென்னை: தென்மாவட்ட மக்களின் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க விரைவான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் கே.என்.நேருவுக்கு வைகோ கடிதம் எழுதியுள்ளார்.

6.அரசின் மின்னஞ்சல் தளத்தில் ஊடுருவல் இல்லை!

அரசின் மின்னஞ்சல் தளத்தில் இணைய ஊடுருவல் இல்லையென மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கூறியுள்ளது.

7.தேவஸ்தான வாரியத்தை கலைக்க வலியுறுத்தி கேதார்நாத் அர்ச்சகர்கள் தொடர்போராட்டம்

உத்தரகாண்ட் மாநிலத்தின் சார் டாம் தேவஸ்தான வாரியத்தை கலைக்க வலியுறுத்தி, அக்கோயிலின் அர்ச்சகர்கள் மூன்று நாட்களாக கேதார்நாத் கோயிலுக்கு முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
8.காணாமல்போன 2 சிறுமிகள் மரணம்: விசாரணையைத் தீவிரப்படுத்த முதலமைச்சர் உத்தரவு

திஸ்பூர்: அஸ்ஸாம் மாநிலத்திலுள்ள கொக்ராஜர் மாவட்டத்தில் காணாமல்போன இரண்டு சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணையைத் தீவிரப்படுத்த வேண்டும் என காவல் துறைக்கு முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா உத்தரவிட்டுள்ளார்.

9.டிஎச்எஃப்எல் பங்குகளில் வர்த்தகம் செய்யத் தடை!

ஜூன் 14ஆம் தேதி முதல் டிஎச்எஃப்எல் பங்குகளில் வர்த்தகம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இது மும்பை பங்குச் சந்தை, தேசியப் பங்குச் சந்தை ஆகிய இரு முகமைகளுக்கு பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

10.அமலா பாலை தொடர்ந்து ஆடையின்றி நடிக்கும் ஆண்ட்ரியா

சென்னை: பிசாசு- 2 திரைப்படத்தில் இணைந்துள்ள ஆண்ட்ரியா அதில் ஆடையின்றி நடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details