தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் - Top 10 News @ 9 am - லேட்டஸ்ட் நியூஸ்

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம்...

9 மணி செய்திச் சுருக்கம்
9 மணி செய்திச் சுருக்கம்

By

Published : Jun 13, 2021, 9:21 AM IST

1. வாழ்வாதாரத்தை இழந்துள்ள ஏழை மக்கள் - உணவு வழங்கும் ஜெயின் சங்கம்

ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து உணவின்றித் தவித்து வரும் ஏழை மக்களுக்கு, ஜெயின் சங்கத்தினர் உணவு தயாரித்து வழங்கினர்.

2. அனைத்துப் பள்ளிகளிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ்

தமிழ்நாட்டில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்திடும் வகையில் பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

3. திண்டுக்கல் அருகே மழைப்பொழிவால் சோள விளைச்சல் பாதிப்பு

ஆத்தூர் தாலுகாவிற்கு உள்ளிட்டப் பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளம், இரும்பு சோளம், கம்பு, கேழ்வரகு போன்றவை அதிக மழைப்பொழிவால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.

4. முறைகேட்டில் ஈடுபடும் அலுவலர்கள் - மீனவர்கள் குற்றச்சாட்டு!

பழனி பகுதியில் உள்ள குளங்களில் மீன் வளர்ச்சிக்கழகம் சார்பில் வளர்க்கப்படும் மீன்களைப் பிடிப்பதில்‌, மீனவர் சங்க நிர்வாகிகள் சிலருடன் அலுவலர்கள் இணைந்து முறைகேடு செய்வதாக மீனவர் சங்க உறுப்பினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

5. 'முன்னாள் மாணவிகளின் வாட்ஸ்அப் குழுவில் ஆபாசப் படங்கள் பகிர்வு’ - பெற்றோர் காவல் நிலையத்தில் புகார்

முன்னாள் அரசுப்பள்ளி மாணவிகளின் வாட்ஸ்அப் குழுவில் ஆபாசப் படங்கள் பகிரப்பட்டதால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள், காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.

6. வேலூரில் 126 பேருக்கு கறுப்புப் பூஞ்சை நோய்

வேலூர்: கறுப்புப் பூஞ்சை தொற்றால் பாதித்த 126 பேருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

7. கரோனா 2ஆம் அலை: 724 மருத்துவர்கள் உயிரிழப்பு

கரோனா தொற்றின் இரண்டாம் அலையின் போது, சுமார் 724 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.

8. உயிரிழந்த யானையைச் சுற்றி பிளிறிய யானைக் கூட்டம்

ஆந்திர மாநிலம், கோதிகுண்டா கிராமத்தில் மின்வேலியில் சிக்கி உயிரிழந்த யானையைச் சுற்றி 15 யானைகள் முகாமிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

9. உணவின்றித் தவித்த பொம்மை தொழிலாளர்கள்: உணவளித்து உதவிய சிறுமி!

சென்னை: ஊரடங்கு நேரத்தில் உணவின்றித் தவித்த பொம்மை செய்யும் தொழிலாளர்களுக்கு உணவளித்து உதவிய சிறுமிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

10. லாக்டவுனை பயனுள்ள வகையில் செலவிடும் சிவகார்த்திகேயன்

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் தனது வீட்டில் உள்ள காய்கறித் தோட்டம் வைத்துள்ளது குறித்த காணொலியை வெளியிட்டுள்ளார். இது அவரது ரசிகர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details