தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS @ 9AM - etvbharat tamilnadu news

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திச் சுருக்கம் இதோ.

9AM
9AM

By

Published : Jun 10, 2021, 9:05 AM IST

1.ஊரடங்கு நீட்டிப்பா? உயர் அலுவலர்களுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை

சென்னை: ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாகவும், கூடுதல் தளர்வுகள் வழங்கப்படுவது தொடர்பாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயர் அலுவலர்களுடன் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.

2.'முதலமைச்சரையே வந்து கரோனா உடலை எரிக்கச் சொல்!' - கறாராகப் பேசிய ஊழியர்

ஈரோடு: கரோனா நோயாளியின் உடலை தகனம்செய்ய அனுமதிப்பதில் ஏற்பட்ட தகராறில் இறந்தவரின் சடலத்தை பல மணி நேரம் காத்திருக்க வைத்த அவலம் ஏற்பட்டது.

3.'வானில் ஓர் கண்ணாமூச்சி' - இன்று சூரிய கிரகணம்

இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம், வளைய சூரிய கிரகணமாக இன்று நிகழ்கிறது. இந்திய நேரப்படி மதியம் 1:42 மணிக்கு ஆரம்பித்து மாலை 6:41 வரை இந்நிகழ்வு நிகழவுள்ளது.

4.தமிழ்நாட்டைப்போல +2 பொதுத்தேர்வை ரத்து செய்த தெலங்கானா அரசு

தெலங்கானா மாநில அரசு பன்னிரெண்டாம் வகுப்பு மாநிலப் பாடத்திட்டத்திற்கான தேர்வை ரத்து செய்து அறிவித்துள்ளது.

5.கோவேக்ஸின் மூன்றாம் தவணை பரிசோதனை முடிவுகள் ஜுலையில் வெளியீடு - பாரத் பயோடெக்

ஹைதராபாத்: கோவேக்ஸின் மூன்றாம் தவணை பரிசோதனை முடிவுகள் ஜுலையில் பொதுவெளியில் வெளியிடப்படும் என அதனைத்தயாரிக்கும் பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

6.அனுமதி பெறாமல் கரோனா பரிசோதனை: 15 தனியார் ஆய்வகங்களுக்கு நோட்டீஸ்

நாமக்கல்: அனுமதி பெறாமல் கரோனா பரிசோதனை செய்த 15 தனியார் ஆய்வகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

7.அரசு நியாயவிலைக் கடையில் காலாவதியான கோதுமை மாவு விற்பனை!

கரூர்: கொடையூர் நியாயவிலைக் கடையில் காலாவதியான கோதுமை மாவு விற்கப்பட்டது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

8.உலக பல்கலைக்கழக தரவரிசையில் இடம்பிடித்த இந்திய கல்வி நிறுவனங்களுக்குப் பாராட்டு!

கியூ.எஸ். உலக பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் இடம்பிடித்த மூன்று இந்திய கல்வி நிறுவனங்களை, பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.

9.மும்பையில் இடிந்து விழுந்த அடுக்குமாடி குடியிருப்பு: 11 பேர் பலி

மும்பை: மலாட் மேற்குப் பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்பு இடிந்துவிழுந்த விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

10.250 ரசிகர்களுக்குத் தலா ரூ.5000 தந்த சூர்யா

சென்னை: கரோனா ஊரடங்கால் தவித்துவரும் ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா சத்தமின்றி உதவி செய்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details