தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காலை 9 மணி செய்திச் சுருக்கம்- TOP 10 NEWS @ 9 AM

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திச் சுருக்கம்...

TOP 10 NEWS 9 AM
TOP 10 NEWS 9 AM

By

Published : May 25, 2021, 9:42 AM IST

கடலூர் எம்.எல்.ஏ.,வுக்கு கரோனா பாதிப்பு உறுதி: தனியார் மருத்துவமனையில் அனுமதி!

கடலுார்: சட்டப்பேரவை உறுப்பினர் அய்யப்பனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவா் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

கார் ஆம்புலன்ஸ் சேவை: 12,293 பேர் பயன்!

சென்னை: கார் ஆம்புலன்ஸ் சேவையைப் பயன்படுத்தி, இதுவரை 12,293 பேர் பயனடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே 4 புதிய பெட்டிகளுடன் மலை ரயில் சோதனை ஓட்டம்!

நீலகிரி: குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே 4 புதிய பெட்டிகளுடன் மலை ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

கால்நடையாக சென்ற தொழிலாளர்கள் - காலத்தில் உதவிய கரூர் போலீசார்!

கரூர்: கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால், தங்களின் சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல் தவித்த வட மாநில தொழிலாளர்களுக்கு, கரூர் காவல் துறையினர் உதவி உயர் அலுவலர்களின் பாராட்டைப் பெற்றுள்ளது.

நாளை முழு சந்திர கிரகணம்... இந்தியாவில் எங்கு தெரியும்?

இந்த ஆண்டின் முதல் சந்திரகிரகணம் நாளை(மே.26) நிகழ்கிறது. இதனை இந்தியாவிலும் பார்க்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே 26ஆம் தேதி தற்காலிக சபாநாயகர், சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவியேற்பு!

புதுச்சேரி : வருகின்ற மே 26ஆம் தேதி என்.ஆர். காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் லட்சுமி நாராயணன் தற்காலிக சபாநாயகராக பதவியேற்கிறார். இதனைத் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு, தற்காலிக சபாநாயகர் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

'மதுரையில் விரைவில் கரோனா கட்டுக்குள் கொண்டு வரப்படும்' அமைச்சர் பி.மூர்த்தி!

மதுரையில் விரைவில் கரோனா கட்டுக்குள் கொண்டு வரப்படும் என, பத்திரப்பதிவு துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார்.

சென்னையில் பிரியாணி கடை உரிமையாளர் காரில் கடத்தல்!

சென்னை: பிரியாணி கடை உரிமையாளரைக் காரில் கடத்திய காவலர் உள்ளிட்ட கும்பலை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.
'மே 26 இல் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம்' பி.ஆர்.பாண்டியன்!

திருவாரூர்: வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, மே 26 கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என, தமிழக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

மாலி நாட்டின் அதிபர், பிரதமர் கைது - ராணுவம் அதிரடி!

பமாகோ: மாலி நாட்டின் அதிபர், பிரதமரை அந்நாட்டின் ராணுவம் அதிரடியாகக் கைது செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details