தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காலை 9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9 AM - tamilnadu news

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திச் சுருக்கம்.

Top 10 news @ 9 AM
9 மணி செய்திச் சுருக்கம்

By

Published : Jan 12, 2021, 9:25 AM IST

தடுப்பூசிப் போடும் பணி குறித்த ஆலோசனைக் கூட்டம்; தமிழ்நாடு முதலமைச்சர் பங்கேற்பு!

சென்னை: பிரதமர் மோடி தலைமையில் தடுப்பூசிப் போடும் திட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார்.

'200 தொகுதிகளில் அசால்ட்டாக வெற்றி பெறுவோம்' - அதிமுக அவைத்தலைவர்

சென்னை: வருகின்ற சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலில் அதிமுக 200 தொகுதிகளில் வெற்றிபெறும் என அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி: அலுவலர்கள் ஆயத்தமாக இருக்க தெலங்கானா முதலமைச்சர் அறிவுறுத்தல்

தெலங்கானாவில் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியைத் தொடங்குவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய அலுவலர்களுக்கு, அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் வலியுறுத்தியுள்ளார்.

சமாதான ஒப்பந்தத்தின் மூலம் போடோ பிரச்னைக்கு பாஜக தான் தீர்வு கண்டது - ஜெ.பி. நட்டா

கவுஹாத்தி : ஐம்பது ஆண்டுகாலமாக நீடித்துவந்த போடோ பிரச்னைக்குச் சமாதான ஒப்பந்தத்தின் மூலமாக பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தீர்வளித்தனர் என பாஜக தேசியத் தலைவர் ஜெகத் பிரகாஷ் நட்டா கூறியுள்ளார்.

'எங்கத் தொகுதி எம்.பி.யைக் காணோம்... கண்டுபிடிச்சு தரவங்களுக்குச் சன்மானம்...'

திண்டுக்க‌ல் நாடாளுமன்ற‌ உறுப்பின‌ரை காண‌வில்லை என‌ கொடைக்கான‌லில் பொதும‌க்க‌ள் ச‌மூக‌ வ‌லை‌த‌ள‌ங்கள் மூலமாக செய்தி ப‌ர‌ப்பி வ‌ருகின்ற‌ன‌ர்.

கையும் களவுமாக பிடிபட்ட வேளாண்துறை துணை இயக்குநர்: லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி!

செங்கல்பட்டு: தடையில்லா சான்று வாங்க லஞ்சம் கேட்ட வேளாண்துறை துணை இயக்குநரை, லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் செங்கல்பட்டில் கைது செய்தனர்.

உள்ளூரில் வேட்பாளர்கள் இல்லையா? : செய்யூர், மதுராந்தகம் தொகுதி வாக்காளர்கள் அதிருப்தி

செங்கல்பட்டு: செய்யூர், மதுராந்தகம் ஆகிய தொகுதிகளில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடத் தகுதி வாய்ந்த உள்ளூர் வேட்பாளர்கள் இரு திராவிடக் கட்சிகளிலும் இல்லையா? என அத்தொகுதி வாக்காளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

5 நிமிட சூறைக்காற்று...100க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்!

மயிலாடுதுறை: திடீரென்று 5 நிமிடங்கள் வீசிய சூறைக்காற்றால் ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்து 100க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்த நிலையில், 500 ஏக்கருக்கும் மேல் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

சேதமடைந்த ஊத்துக்கோட்டை தரைப்பாலம்; கடக்க முயன்ற இருவர் மீது மின்சாரம் பாய்ந்தது

திருவள்ளூர்: ஊத்துக்கோட்டை அருகே மழை வெள்ளத்தால் தரைப்பாலம் சேதம் அடைந்துள்ள நிலையில், அதில் நடந்து சென்ற இரண்டு நபர்கள் மின்சாரம் தாக்கி ஆபத்தான நிலையில் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொள்ளையர்கள் கைவரிசை: ஷட்டரை உடைத்து சுடிதாரை அள்ளிச்சென்ற கும்பல்!

சென்னை: அயனாவரத்தில் ஷட்டரை உடைத்து பேன்ஸி ஸ்டோரில் சுடிதாரை திருடிசென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details