தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9 AM - top ten news

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம்.

9am
9am

By

Published : Jul 27, 2020, 9:01 AM IST

தேனியில் ஒரே நாளில் 217 பேருக்கு கரோனா

தேனி: அதிமுக பிரமுகர்கள், கிளைச்சிறை முதன்மை காப்பாளர், ஆயுதப்படை காவலர் உள்பட ஒரே நாளில் 217 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மதுரையில் 10 ஆயிரத்தை நெருங்கும் கரோனா பாதிப்பு

மதுரை: புதிதாக 209 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதியானதையடுத்து, தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 805ஆக அதிகரித்துள்ளது.

வேலூரில் 5 ஆயிரத்தைக் கடந்தது கரோனா பாதிப்பு

வேலூர்: புதியதாக மேலும் 204 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்தைக் கடந்ததுள்ளது.

101 வகை உணவு:மருமகளுக்கு விருந்து வைத்து அசத்திய மாமியார்

மதுரையில் 101 வகை உணவுடன் தடபுடலாக விருந்து கொடுத்து மருமகளை அசரவைத்துள்ளார் மாமியார் ஒருவர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

மகள்களை கொண்டு உழவு செய்த விவசாயி: டிராக்டரை அனுப்பி வைத்த நடிகர் சோனு சூட்!

அமராவதி: ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதித்து மகள்களை கொண்டு ஏறு பூட்டி உழவு செய்த விவசாயிக்கு நடிகர் சோனு சூட் மாலைக்குள் உங்கள் நிலைத்தை டிராக்டரில் உழவு செய்யலாம் என ட்விட்டரில் பதிவிட்டார். அதேபோல விவசாயி வீட்டுக்கு புதிய டிராக்டரை அனுப்பி வைத்து அனைவரின் பாராட்டையும் பெற்றுவிட்டார்.

'கோவிட் பரவலைத் தடுக்க அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும்' - ஆளுநர் கிரண்பேடி!

புதுச்சேரி : உறுதிப்படுத்தப்படாத செய்தியைப் பரப்புவதில் கவனம் செலுத்துவதைத் தவிர்த்து கோவிட் பரவலைத் தடுக்க அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என, ஆளுநர் கிரண்பேடி வலியுறுத்தியுள்ளார்.

டெல்லியின் நிலைமை திருப்திகரமாக உள்ளது - சுகாதாரத் துறை அமைச்சர் தகவல்

டெல்லியின் நிலைமை திருப்திகரமாக உள்ளது என தெரிவித்த சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின், வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த இன்னும் நடவடிக்கைகள் தேவை என கூறியுள்ளார்.

கரையைக் கடந்த ஹன்னா புயல்!

வாஷிங்டன்: டெக்சாஸ் மாகாணத்தில் நிலை கொண்டிருந்த ஹன்னா புயல் கரையைக் கடந்தது.

'இந்தாண்டு ஐபிஎல் கோப்பையை ஆர்.சி.பி வெல்லும்' - பிராட் ஹாக் நம்பிக்கை!

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) 13ஆவது சீசனை விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி) அணி வெல்லும் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிராட் ஹாக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ரௌத்திர நாயகன் விஜய் சேதுபதியின் புகைப்படத் தொகுப்பு

கெத்து போஸ்

ABOUT THE AUTHOR

...view details