தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாலை 7 மணி செய்திச் சுருக்கம் - Top 10 news @ 7 PM - 7 மணி செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் மாலை 7 மணி செய்திச் சுருக்கம் இதோ...

மாலை 7 மணி செய்திச் சுருக்கம்
மாலை 7 மணி செய்திச் சுருக்கம்

By

Published : Apr 3, 2021, 7:29 PM IST

இளநீரை சீவி வாக்கு சேகரித்த ஜெயக்குமார்

சென்னை : அமைச்சர் ஜெயக்குமார் ராயபுரத்தில் இளநீரை சீவி, அதை குடித்துவிட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

சுற்றுச்சூழல் பிரச்சினைகளில் அரசியல் கட்சிகளின் பங்களிப்பும் தாக்கமும் ஆய்வறிக்கை வெளியீடு

தமிழ்நாடு சுற்றுச்சூழல் பிரச்சினைகளில் அரசியல் கட்சிகளின் பங்களிப்பும் தாக்கமும் என்ன என்பது குறித்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

பல்லாவரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் தீவிர வாக்கு சேகரிப்பு!

சென்னை: பல்லாவரம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் சிட்லப்பாக்கம் ச. ராஜேந்திரன் அதிமுக ஆட்சியில் செய்யப்பட்ட திட்டங்களைக் கூறி, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

'ஈ'க்கள் இம்சையால் தேர்தலைப் புறக்கணிக்கும் மக்கள்!

தர்மபுரி : அரூர் அருகே கோழிப்பண்ணையால் ஈக்கள் உற்பத்தி அதிகரித்து ஏற்படும் சுகாதாரச் சீர்கேட்டை சரி செய்யக்கோரி, கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்காததால், ஏழு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பல்வேறு பகுதிகளில் கறுப்புக்கொடி கட்டி தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.

சுயேச்சை வேட்பாளரிடம் லஞ்சம் கேட்ட தலைமை காவலர் பணியிடை நீக்கம்!

சென்னை: சுயேச்சை வேட்பாளரிடம் ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்ட தலைமை காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

சத்தீஸ்கரில் என்கவுன்டர்: பாதுகாப்பு படை வீரர் உயிரிழப்பு!

ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் நடத்தப்பட்ட என்கவுன்டரின்போது, பாதுகாப்பு படை வீரர் ஒருவர் உயிரிழந்தார்.

இன்று டிஸ்சார்ஜ் ஆகிறார் சரத் பவார்

உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் டிஸ்சார்ஜ் செய்யப்படயிருக்கிறார்.

கோவிட்-19 பாதிப்புக்குள்ளான பரூக் அப்துல்லா மருத்துவமனையில் அனுமதி

கோவிட்-19 பாதிப்புக்குள்ளான தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆர்எஸ்எஸ் அமைப்பை ஒருங்கிணைந்து எதிர்ப்போம் - ராகுல் காந்தி

டெல்லி: விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் டிக்கைட் மீது நடத்தப்பட்ட கல்வீச்சு சம்பவத்தை கண்டித்துள்ள ராகுல் காந்தி, ஆர்எஸ்எஸ் அமைப்பை ஒருங்கிணைந்து எதிர்ப்போம் எனத் தெரிவித்துள்ளார்.

விஜய்சேதுபதியின் 'மும்பைக்கார்' பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

'மாநகரம்' படத்தின் இந்தி ரீமேக் ஆன மும்பைக்கார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details