தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாலை 7 மணி செய்திச் சுருக்கம் - Top 10 news @ 7 PM

ஈடிவி பாரத்தின் மாலை 7 மணி செய்திச் சுருக்கம்...

Top 10 news @7pm
Top 10 news @7pm

By

Published : Apr 2, 2021, 7:35 PM IST

கல்லுக்குழி பகுதியில் ஆய்வு மேற்கொண்ட கமல் ஹாசன்

கல்லுக்குழி பகுதியில் ஆய்வு மேற்கொண்ட கமல் ஹாசனை ஆரத்தி எடுத்து பொதுமக்கள் வரவேற்றனர்.

தமிழ்நாடு கட்சிகளின் அப்டேட்டான பரப்புரை

சமீபத்தில், முதலமைச்சர் பழனிசாமியை நேரடியாகவே தாக்கும் விதமாக வீடியோ ஒன்றை அமமுக உருவாக்கியிருக்கிறது.

டீ போட்டுக் கொடுத்தும் பூரி சுட்டு கொடுத்தும் அதிமுக கூட்டணி பாமக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு!

சட்டப்பேரவைத் தொகுதியில், சிறு குறு வியாபாரியிடம் சென்று டீ போட்டுக் கொடுத்தும், பூரி சுட்டுக் கொடுத்தும் அதிமுக கூட்டணியின் பாமக வேட்பாளர் மகேஷ்குமார் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

ஐரோப்பாவில் கோவிட்-19 தடுப்பூசி செலுத்தும் பணிகள் மந்தம்: உலக சுகாதார அமைப்பு குற்றச்சாட்டு

ஐரோப்பாவில் தடுப்பூசி செலுத்தும் வேகம் மிகக் குறைவாக உள்ளது என உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பா இயக்குனர் ஹான்ஸ் குல்கே தெரிவித்துள்ளார்.

கோதாவரி புஷ்கரில் படகு சவாரி விபத்து: 6 பேர் உயிரிழப்பு

நிஜாமாபாத் அருகே கோதாவரி புஷ்கர் ஆற்றில் படகு சவாரி சென்றபோது, 6 பேர் நீரில் முழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக வில்லன் நடிகர் தீனா பரப்புரை

திருவள்ளூர் சட்டப்பேரவைத் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர் மைக்கேல் தாஸுக்கு சித்தம்பாக்கத்தில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

தந்தையின் வழியில் திமுக உடன்பிறப்புகளுக்கு மு.க. ஸ்டாலின் கடிதம்

மறைந்த திமுக தலைவர் மு. கருணாநிதியின் பாணியில் தி.மு. கழக உடன்பிறப்புகளுக்கு மு.க. ஸ்டாலின் உருக்கமாக கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், நெருக்கடிகளை நான் எதிர்கொள்கிறேன் வெற்றியை நீங்கள் பெற்றுத்தாருங்கள் என தெரிவித்துள்ளார்.

அதிமுக-பாஜக இனிமேல் ஆட்சியில் இருக்கக்கூடாது- திருமுருகன் காந்தி!

அனைவருக்கும் விரோதமாக இருக்கக்கூடிய அதிமுக-பாஜக இனிமேல் ஆட்சியில் இருக்கக்கூடாது என மே 17 இயக்க ஒருங்கினைப்பாளர் திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு வைகோ வாழ்த்து

தாதா சாகேப் பால்கே விருது கிடைத்து இருப்பது மகிழ்ச்சி என சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புதுமுக இயக்குநருடன் கைகோர்த்த விஷால்... பக்கபலமான யுவன் சங்கர் ராஜா!

விஷால் ஃபிலிம் பேக்டரி தயாரிப்பில் புதுமுக இயக்குநர் து.பா.சரவணன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் '#விஷால் 31' புதிய படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.

ABOUT THE AUTHOR

...view details