தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7PM - தலைப்பு செய்திகள்

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச் சுருக்கம்.

Top 10 news @ 7PM
Top 10 news @ 7PM

By

Published : Sep 27, 2020, 7:02 PM IST

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 5,791 பேருக்கு கரோனா உறுதி!

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 5 ஆயிரத்து 791 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குணமடைந்ததும் எங்களுக்காக ஒரு பாடல் பாட வேண்டும் - எஸ்பிபியின் மருத்துவமனை நாட்கள் பற்றி விவரிக்கும் சிறப்பு மருத்துவர்

கை ,கால்களுக்கு தனித்தனியாக பிசியோதெரபி மேற்கொண்ட அவர், இயந்திரத்தின் மூலமும் பிசியோதெரபி செய்தார். மருத்துவமனையில் இருந்தபோது ஒருமுறை கூட கோபப்பட்டது கிடையாது. எப்போதும் ஒத்துழைப்பு அளித்தார்.

'9ஆம் நூற்றாண்டு கல் செக்கு' - ஆண்டிப்பட்டி டூ கிண்ணிமங்கலம் என்ன தொடர்பு?

"தெந்முட்ட நாட்டு கண்ணிமங்கலத்து குடியான் இடுவிச்ச செக்கு" என்ற வரிகள் பொருந்திய கல் செக்கு ஒன்று ஆண்டிபட்டியில் கண்டறியப்பட்டுள்ளது

முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் மறைவு: ஆளுநர் பன்வாரிலால் இரங்கல்!

முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் மறைவிற்கு தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இரங்கல் தெரிவித்து, அறிக்கை வெளியிட்டுள்ளார்.

டாஸ்மாக் கடை ஊழியரை தாக்கி ரூ. 3.46 லட்சம் பணம் கொள்ளை: மூவர் கைது!

பரமத்தி வேலூர் அருகே ரோந்து பனியிலிருந்த காவல் துறையினர், டாஸ்மாக் கடை ஊழியரை தாக்கி 3 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்த மூன்று இளைஞர்களை கைது செய்தனர்.

ராமநாதபுரத்தில் மக்கள் குறைகளை தெரிவிக்க பிரத்யேக தொலைபேசி எண் அறிவிப்பு!

ராமநாதபுரம் மாவட்டத்தில் மக்களின் குறைகளை எளிதில் தெரிவிக்க பிரத்யேகமான தொலைபேசி எண்ணை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திக் அறிமுகப்படுத்தியுள்ளார்.

புதுச்சேரியில் அக்டோபர் 5ஆம் தேதி பள்ளிகள் திறப்பு!

புதுச்சேரி மாநிலத்தில் வரும் 5ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

’கடவுள் பரிசளித்த குரல்’ - எஸ்.பி.பி குறித்து அமிதாப்பச்சன்!

எஸ்.பி.பியின் குரல் கடவுளால் பரிசளிக்கபட்டது என்று நடிகர் அமிதாப்பச்சன் தெரிவித்துள்ளார்.

'அவர் ஒன்றும் மெஷின் கிடையாது' - கோலியின் பயிற்சியாளர் ஆவேசம்!

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் சமீபத்திய செயல்முறைகள் பற்றி வெளிவரும் விமர்சனங்களுக்கு, அவரது இளம்வயது பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா பதிலடி கொடுத்துள்ளார்.

தோனியின் சாதனையை முறியடித்த அலிஸா ஹீலி!

ஆஸ்திரேலிய மகளிர் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்வுமன் அலிஸா ஹீலி, சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் 92 விக்கெட்டுகளை கீப்பிங் முறையில் வெளியேற்றி சாதனைப் படைத்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details