தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈடிவி பாரத் காலை 7 மணி செய்தி சுருக்கம்...Top 10 news @7am - குழந்தை நட்சத்திரம் நாகவிஷால்

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்தி சுருக்கம்...

Top 10 news @7am
Top 10 news @7am

By

Published : Mar 24, 2021, 6:55 AM IST

படுக்கையறையிலேயே காளாண் வளர்ப்பு: மஷ்ரூம் லேடியின் வெற்றிக்கதை

பிகார் மாநிலத்தைச் சேர்ந்த வீணா தேவி படுக்கையறையில் காளான்களைப் பயிரிட்டு மஷ்ரூம் லேடியாகத் திகழ்கிறார்.

'இதுவரை ரூ. 265.45 கோடி பறிமுதல்' - சத்யபிரதா சாகு

சென்னை: இதுவரை 265.45 கோடி ரூபாய் மதிப்புள்ள பரிசுப் பொருள்கள், பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

'அலுவலர்களின் உதவியுடன் பணம் பட்டுவாடா செய்யும் அதிமுக' - பாலகிருஷ்ணன்

மதுரை: "அதிமுகவினர் அலுவலர்களின் உதவியுடன் வாக்காளர்களுக்கு தாராளமாக பணப் பட்டுவாடா செய்துவருகின்றனர்" என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

'சொந்த தொகுதியையே ஏமாற்றும் எடப்பாடி பழனிசாமி' - ஸ்டாலின்

சேலம்: திமுக வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின், "முதலமைச்சர் பழனிசாமி அவரது சொந்த தொகுதி மக்களையே ஏமாற்றுகிறார்" என குற்றஞ்சாட்டினார்.

'மதுர பாஷைதான் இந்த விருதுக்கு காரணமே' - குழந்தை நட்சத்திரம் நாகவிஷால்

கேடி என்ற கருப்புதுரை படத்தில் நான் பேசிய மதுரை வட்டார வழக்குதான் எனக்கு தேசிய விருதைப் பெற்றுத் தந்துள்ளது. இதற்காக நான் மிகவும் பெருமைப்படுகிறேன் என்று குழந்தை நட்சத்திர விருதைப் பெற்றுள்ள மதுரையைச் சேர்ந்த பள்ளி மாணவர் நாகவிஷால் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

'இலங்கை தமிழர்களுக்கு துரோகம் இழைத்த மோடி அரசாங்கம்'- கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

இலங்கையில் நடைபெற்ற போர் குற்றங்கள் குறித்து, ஐநா மனித உரிமை மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு மோடி அரசாங்கம் ஆதரவு தராமல் இலங்கை தமிழர்களுக்கு துரோகம் இழைத்து விட்டது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

நிலத்தை உழுது வாக்கு சேகரித்த கலசப்பாக்கம் எம்எல்ஏ

திருவண்ணாமலை: கலசப்பாக்கம் தொகுதியில், போட்டியிடும் அதிமுக வேட்பாளரும் எம்எல்ஏவுமான பன்னீர் செல்வம் தேர்தல் பர்பபுரையின் போது, விவசாயி ஒருவரின் நிலத்தை டிராக்டரில் உழுது அசத்தினார்

திமுகவுடன் மீண்டும் கைகோர்த்த கோவை தங்கம்

சேலம் : தமாகாவிலிருந்து விலகிய அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் கோவை தங்கம், முக ஸ்டாலின் முன்னிலையில், மீண்டும் திமுகவில் இணைந்தார்.

கரோனா தடுப்பூசி விநியோகத்தை தீவிரப்படுத்த வேண்டும் - மத்திய அரசு

டெல்லி: கரோனா சோதனையை அதிகப்படுத்தி தடுப்பூசி விநியோகத்தை தீவிரப்படுத்த மத்திய அரசு, மாநில அரசுகளை வலியுறுத்தியுள்ளது.

'ஈழத்தமிழர் படுகொலைக்கு நீதி கிடைப்பது உறுதி' - ராமதாஸ்

இலங்கைக்கு எதிரான ஐநா தீர்மானம் வெற்றி பெறும் என்றும் ஈழத்தமிழர் படுகொலைக்கு நீதி கிடைப்பது உறுதி எனவும் பாமக நிறுவனர் ராமதாஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details