தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திகள்...! - 7 மணி செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்தி சுருக்கம்...

7 மணி செய்திச் சுருக்கம்  top 10 news @7am
7 மணி செய்திச் சுருக்கம் top 10 news @7am

By

Published : Mar 2, 2021, 7:05 AM IST

மகாராஷ்டிரா மின் தடைக்கு சீனர்களின் சைபர் தாக்குதல் காரணமா... மாநில அமைச்சரின் பதில் என்ன?

மகாராஷ்டிரா கடந்தாண்டு ஏற்பட்ட மின் தடைக்கும், சீனர்களின் சைபர் தாக்குதலுக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியான தகவலை அம்மாநில மின்சாரத் துறை அமைச்சர் நிதின் ராவத் உறுதி செய்துள்ளார்.

ஸ்டாலினை எதிர்த்துக் களம்காணும் ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப்?

ஓ. பன்னீர்செல்வத்தின் இளைய மகன் ஜெயபிரதீப் கொளத்தூர், வில்லிவாக்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட அதிமுகவினர் தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு அளித்தனர்.

தடம் மாறும் மாணவர்களின் மனம் மாற்ற முயற்சிக்கும் புகைப்படக் கலைஞர்

கரோனா ஊரடங்கால் மனம் மற்றும் உடலளவில் பாதிப்படைந்த மாணவர்களுக்கு புதிய திறன்களை வளர்க்க உதவும் விதமாக சென்னை மாநகராட்சியின் உதவியுடன் புகைப்பட பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார் கலைமாமணி சேஷாத்திரி நாதன் சுகுமாரன்.

234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தவுள்ள சீமான்!

நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்களை ஒரே மேடையில் அறிமுகப்படுத்த இருப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தெரிவித்துள்ளார்.

தேர்தல் உலா-2021: நட்சத்திரத் தொகுதிகள் - கொளத்தூர்

தேர்தல் நேர பரபரப்பில் சில தொகுதிகள் மட்டும் அதிக கவனம் கோரும். போட்டியிடும் வேட்பாளர்கள், தொகுதிக்குள் நிலவும் பிரச்னைகள் காரணமாக தனித்து தெரியும் அத்தொகுதிகள் நட்சத்திரத் தொகுதிகளாக அடையாளம் பெறும். அப்படி தமிழ்நாட்டின் 234 தொகுதிகளில் உள்ள நட்சத்திர தொகுதிகளின் அணிவகுப்பு இது... கொளத்தூர் தொகுதி.

'பிரதமருக்கு புதுச்சேரி செவிலியர் தடுப்பூசி செலுத்தியது பெருமைப்படக்கூடிய விஷயம்'

பிரதமர் மோடிக்கு புதுச்சேரி செவிலியர் தடுப்பூசி செலுத்தியது பெருமைப்படக்கூடிய விஷயம் என துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

போலி அமெரிக்க டாலர்களை இந்திய பணமாக மாற்ற முயன்ற நைஜீரியா வியாபாரி கைது!

போலி அமெரிக்க டாலர்களை கொடுத்து, இந்திய ரூபாய் பெற முயன்ற நைஜீரியா நாட்டைச் சேர்ந்த வியாபாரியை நேற்று (மார்ச்.1) காவல் துறையினர் கைது செய்தனர்.

இபிஎல்: ஷெஃபீல்ட் யுனைடெட்டை வீழ்த்தி லிவர்பூல் அணி வெற்றி!

இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் லிவர்பூல் எஃப்சி அணி 2-0 என்ற கணக்கில் ஷெஃபீல்ட் யுனைடெட் அணியை வீழ்த்தியது.

மதுபோதையில் டீ மாஸ்டரை அடித்தேகொன்ற இளைஞருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை!

மது போதையில் ஏற்பட்ட தகராறு டீ மாஸ்டர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விடுத்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தேர்தல் பணியாற்றும் அங்கீகரிக்கப்பட்ட ஊடகத்தினருக்கு தபால் மூலம் வாக்களிக்க அனுமதி!

இந்திய தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஊடகத்தினருக்கு தபால் வாக்கு அளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details