தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இரவு 7 மணி செய்திச் சுருக்கம் Top 10 News @ 7PM - ஈடிவி பாரத் செய்திகள்

ஈடிவி பாரத்தின் இரவு 7 மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

Top 10 news @ 7 PM
Top 10 news @ 7 PM

By

Published : Oct 3, 2021, 7:10 PM IST

1. கைதான ஷாருக்கான் மகனுக்கு மருத்துவப் பரிசோதனை

போதைப்பொருள் பயன்படுத்தியதற்காக ஷாருக்கான் மகன் ஆரியன் கான் உள்பட 8 பேர் பிடிபட்ட நிலையில், போதைப்பொருள் தடுப்புப்பிரிவினர், ஆரியன் கானை மருத்துவ சோதனைக்கு உட்படுத்தி உள்ளனர்.

2. பவானிபூர் இடைத்தேர்தல் - அசுர வேட்டையாடிய மம்தா பானர்ஜி

மேற்கு வங்கம் மாநிலம் பவானிபூரில் நடந்த இடைத்தேர்தலில் தொடர்ந்து முன்னிலை வகித்துவந்த முதலமைச்சர் மம்தா பானர்ஜி வெற்றிபெற்றார்.

3. பாலியல் தொல்லை - ஆசிரியர் ராஜகோபால் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதாகியுள்ள பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபால் மீது அசோக் நகர் அனைத்து மகளிர் காவல் துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

4. பழச்சாறு என நினைத்து மது அருந்திய சிறுவன்... குற்ற உணர்ச்சியில் மயங்கிய தாத்தா... அடுத்தடுத்து நிகழ்ந்த சோகம்!

வேலூரில் பழச்சாறு என்று நினைத்து மதுவைக் குடித்த சிறுவனும், அம்மதுவை வாங்கிய சிறுவனின் தாத்தாவும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

5. நாட்டின் சிறந்த முதலமைச்சர் ஸ்டாலின் - குலாம் நபி ஆசாத் புகழாரம்

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியைப் போலவே அவரது மகன் ஸ்டாலின் இருப்பதாகவும், நாட்டின் சிறந்த முதலமைச்சராக அவர் திகழ்வதாகவும் காங்கிரஸ் மூத்தத் தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

6. ’மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்துக்கான தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை’

காஞ்சிபுரம்: மக்களுடைய வாழ்க்கை முன்னேற்றத்துக்கான எந்தத் தேர்தல் வாக்குறுதியையும் திராவிட முன்னேற்றக் கழகம் நிறைவேற்றவில்லை என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

7. அரசு மருத்துவமனையில் லாவகமாய் இரு சக்கர வாகனம் திருட்டு: அதிர்ச்சி தரும் சிசி டிவி காட்சி!

கோவை அரசு மருத்துவமனையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இரு சக்கர வாகனத்தை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

8. அரசு சின்னத்தை தவறாகப் பயன்படுத்தி வாக்கு சேகரிப்பு: திமுக நிர்வாகிகள் மீது புகார்!

திமுக நிர்வாகிகள் அரசு சின்னத்தை தவறாகப் பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக, மாநிலத் தேர்தல் ஆணையத்தில் அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

9. 'கிராம சபைகளுக்கு மதுவிலக்கைத் தீர்மானிக்கும் அதிகாரம் வேண்டும்'

மது விலக்கைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை கிராம சபைகளுக்கு வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாசு கோரிக்கைவிடுத்துள்ளார்.

10. கிடைத்தது பிக் பாஸ் போட்டியாளர்கள் லிஸ்ட்... இவர்கள் தானா?

பிக் பாஸ் 5 நிகழ்ச்சியில் பிரமாண்ட தொடக்க விழா இன்று மாலை 6 மணிக்குத் தொடங்கியது. இதில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த விவரம் நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் கிடைத்துள்ளது. இதோ..

ABOUT THE AUTHOR

...view details