தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7 PM

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச் சுருக்கம்.

7 மணி செய்திச் சுருக்கம்
7 மணி செய்திச் சுருக்கம்

By

Published : Aug 5, 2021, 7:24 PM IST

1 12ஆம் வகுப்பு துணைத் தேர்வு நாளை தொடக்கம்

தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத்தேர்வு நாளை (ஆக.6) தொடங்கி, ஆகஸ்ட் 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

2 கரோனா காலத்தில் பணியாற்றாத ஆசிரியர்களுக்கு விருது இல்லை

தமிழ்நாடு அரசின் நல்லாசிரியர் விருதிற்கு கரோனா காலத்தில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் கற்பிக்காத ஆசிரியர்களை தேர்வு செய்யக்கூடாது என அரசு அறிவித்துள்ளது.

3 அமராவதி சட்டவிரோத நீர் திருட்டு தடுப்பு வழக்கில் ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு

அமராவதி ஆற்றில் சட்டவிரோதமாக கிணறுகள் அமைத்து நீர் திருடப்படுவதை தடுக்கக்கோரிய வழக்கில், கரூர் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

4 சங்கிலியால் யானைகளை கட்டக்கூடாது - உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

சங்கிலியால் யானைகளை கட்டக்கூடாது எனவும், யானைகளின் நலனை உறுதி செய்ய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தும்படியும் தலைமை வனப் பாதுகாவலருக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

5 கடப்பாரையால் தாக்கி மனைவியைக் கொலை செய்ய முயற்சி - கணவன் கைது

செங்கல்பட்டு அருகே மனைவியைக் கடப்பாரையால் தாக்கி கொலை முயற்சி செய்ய கணவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

6 கடின உழைப்புக்கான பலன் - ஹாக்கி அணியை வாழ்த்திய பிரதமர்

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்றதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி கேப்டன் மந்திப் சிங்கை போனில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

7 ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற ரவிக்குமார் தாஹியா குடும்பத்தினர் மகிழ்ச்சி!

டோக்கியோ ஒலிம்பிக் மல்யுத்த இறுதி போட்டியில் ரவி தாஹியா 4-7 என்ற கணக்கில் ஆட்டத்தை இழந்த நிலையில் வெள்ளி வென்றார். அவரது வெற்றியை குடும்பத்தினர் கொண்டாடினர்.

8 4 கோடி பரிசு.. முதல் நிலை அரசு வேலை- சலுகை மழையில் வெள்ளி நாயகன்!

ஒலிம்பிக் மல்யுத்தம் 57 கிலோ ஃப்ரீ-ஸ்டைல் பிரிவில் வெள்ளி வென்ற இந்திய வீரர் ரவிக்குமார் தாஹியாவுக்கு, 4 கோடி ரூபாய் பரிசு தொகையாக ஹரியானா அரசு அறிவித்துள்ளது.

9 பாஜக எம்எல்ஏ என்ட்ரியால் பாதியில் நிறுத்தப்பட்ட தேசிய கீதம்!

மேற்கு வங்கத்தில் கால்பந்து வீரர்களுடன் பாஜக எம்எல்ஏ கைகுலுக்கிக் கொண்டிருந்ததால், தேசிய கீதம் பாதியில் நிறுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

10 கரோனா சேவை - வாடகை கார்களை அடமானம் வைத்து மோசடி

கரோனா சேவைக்கு என்று கூறி வாடகைக்கு கார் எடுத்து அதனை அடமானம் வைத்து மோசடி செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details